ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

ட்ரையம்ஃப் சூப்பர் பைக் உரிமையாளர்களுக்கான முதல் பந்தய கள பயிற்சி முகாம் வரும் 26ந் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

ட்ரையம்ஃப் பைக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்கும், தனது பைக் மாடல்களின் திறனை முழுமையாக உணரும் விதத்தில் பந்தய கள பயிற்சி முகாம்களை சர்வதேச அளவில் நடத்தி வருகிறது.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

இந்த நிலையில், தனது இந்திய வாடிக்கையாளர்களும் பந்தய களத்தில் தங்களது பைக்குகளின் திறனை முழுமையாக பரிசோதித்து உணர்ந்து கொள்வதற்கான பயிற்சி முகாமை முதல்முறையாக நடத்த இருக்கிறது.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் வரும் 26ந் தேதி இந்த பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், ஸ்பீடு ட்ரிப்பிள் மற்றும் டேடோனா ஆகிய பைக் மாடல்கள் உரிமையாளர்கள் பங்கு கொள்ள முடியும்.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று தங்களது சூப்பர் பைக்கை இலகுவாக ஓட்டுவதற்கான நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ட்ரையம்ஃப் உரிமையாளர்கள் பெறுவர். இதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

மொத்தம் 35 பேர் மட்டுமே முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 25ந் தேதி வரை ட்ரையம்ஃப் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

ஜேகே டயர் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் சிங் பயிற்றுனராக கலந்து கொண்டு ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.

ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு ட்ரையம்ஃப் நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Triumph To Conduct Race Track training Programme In India.
Story first published: Saturday, April 20, 2019, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X