தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

நாக்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்த வாலிபரின் தலை மீது லாரி டயர் ஏறியும் அவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து மேலும் பார்க்கலாம்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2015ம் ஆண்டில் நீதிபதி கருணாகரன் உத்தரவிட்ட பின்பு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக பல்வேறு

தீர்ப்புகளும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் பெரிய அளவில் நீண்ட காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

நாடு முழுவதும் ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழகத்திலும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என சமீபத்தில் போலீசார் கூறி இதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றனர்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் போதுவதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஹெல்மெட் போடுவதால் வரும் சில பிரச்னைகள் தான். பெரும்பாலானோருக்கு ஹெல்மெட் போடுவதால் முடிக்கொட்டுதல், பொடுகு பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனாலேயே பலர் ஹெல்மெட்டை போட மறுக்கின்றனர்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

ஆங்காங்கே சிலர் விதிகளை மீறி வருகின்றனர். விதிகளை மீறுபவர்களுக்கு டிராபிக் போலீசார் அபாரதம் விதித்தாலும் சிலர் லஞ்சம் வழங்கியும், தங்கள் செல்வாக்கு மூலமும் தப்பி விடுகின்றனர். காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என பல செல்வாக்கான இடத்தில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தி ஆபராதத்தில் இருந்து தப்பி வருகின்றனர்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்ததால் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நாக்பூர் அருகே நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவினை நாக்பூர் போக்குவரத்து துணை ஆணையர் ராஜ் திலக் ரோசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

அவ்வீடியோ பதிவில் தனக்கு முன்னாள் சென்று கொண்டிருக்கும் லாரியினை வலதுபுறமாக வாலிபர் ஒருவர் கடக்க முயல்கிறார். அப்போது நடைபாதையில் பைக் உராய்ந்து தடுமாறி லாரியின் பின் சக்கரம் அருகே வாலிபர் கீழே விழுகிறார்.அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி செல்கிறது. அருகே வாகனங்களில் செல்லும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

ஆனால் அந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஹெல்மெட் மட்டும் சேதாரமாகி வாலிபர் உயிர் தப்பினர் லாரி தலை மீது ஏறிய சில நிமிடங்களில் அவர் மெதுவாக எழுத்து அருகில் உள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்தார். இந்த விபத்தில் வாலிபர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

ஹெல்மெட்களின் முக்கியத்துவம் குறித்து பலர் அறிவது இல்லை. பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதுதான் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம். ஹெல்மட் போடாமல் செல்பவர்கள் அல்லது ஹெல்மட்டினை அலட்சியம் செய்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும் என கருதப்படுகிறது.

https://twitter.com/rtr_ips/status/1083395789030739968
Most Read Articles
English summary
Truck Runs Over Biker Head: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X