அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 1,001 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குகளை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வெறும் 357ஆக குறைந்துள்ளது. அதாவது 64.83 சதவீதம் என்ற அளவிற்கு உற்பத்தி குறைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

அதே சமயம் டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் 1,084 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகளை உற்பத்தி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வெறும் 271 ஆக குறைந்துள்ளது. அதாவது 75 சதவீதம் என்கிற அளவிற்கு உற்பத்தி குறைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் 628 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்த எண்ணிக்கை 2,085ஆக இருந்தது. அதாவது உற்பத்தி 69.88 சதவீதம் குறைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டில் 183 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 862 ஆக இருந்தது. இது 78.77 சதவீத வீழ்ச்சியாகும்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

அதே சமயம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் உள்நாட்டில் 175 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகளை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 595 ஆக இருந்தது. இது 70.58 சதவீத வீழ்ச்சியாகும்.

MOST READ: நம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

அதாவது கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் உள்நாட்டில் 1,457 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெறும் 358 ஆக குறைந்துள்ளது. இது 75.42 சதவீத சரிவாகும்.

MOST READ: ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

ஏற்றுமதி என எடுத்து கொண்டால் நடப்பு நிதியாண்டில் 114 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 62 யூனிட்களும், 2019ம் ஆண்டு மே மாதம் 52 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

MOST READ: இந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் கடந்த சில மாதங்களாகதான் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விற்பனை நலிவுற்ற நிலைக்கு சென்றுள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.27 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனை மிக கடுமையாக சரிவு... சோகத்தில் டிவிஎஸ் நிறுவனம்...

முந்தைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் விலை 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம். ஆனால் இதில் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ''பாந்தம் பிளாக்'' கலர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RR 310: April-May 2019 Sales Report. Read in Tamil
Story first published: Saturday, June 22, 2019, 19:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X