ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய முதல் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை தல டோனிக்கு வழங்கிய டிவிஎஸ்...

அப்டேட் செய்யப்பட்ட முதல் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் டோனிக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR 310) மாடல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இதன் விலை 2.27 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெக்கானிக்கலாக பார்த்தால் புதிய மாடலில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் காஸ்மெட்டிக் அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளன.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

ஆனால் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் பழைய மாடலின் விலை 2.24 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

ஸ்லிப்பர் கிளட்ச் (Slipper Clutch) வசதியை சேர்த்திருப்பதுதான், அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் வசதி ரைடர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இதுதவிர புதிய ''பாந்தம் பிளாக்'' கலர் ஸ்கீமையும், 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் பெற்றுள்ளது. பழைய மாடல் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் நிலையில், இது சற்று வித்தியாசமாக உள்ளது. அத்துடன் தனித்துவமாக சிகப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

ஆனால் அதே 312.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி இன்ஜின் உடன் 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் தொடர்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 எச்பி பவர் மற்றும் 27.3 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

அதேபோல் Bi-LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், மிட்செலின் பைலட் ஸ்ட்ரீட் டயர் ஆகிய வசதிகளும் அப்டேட் செய்யப்பட்ட 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் தொடர்கின்றன.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் டோமினார் 400, கேடிஎம் ஆர்சி 390, ஹோண்டா சிபி 300 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் உள்ளிட்ட மாடல்களுடன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மோட்டார்சைக்கிள் போட்டியிடுகிறது.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இந்த சூழலில், ஆர்டி (RT - Race-Tuned) ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய முதல் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடருமான மஹேந்திர சிங் டோனிக்கு வழங்கியுள்ளது.

முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...

இதுகுறித்து மஹேந்திர சிங் டோனி கூறுகையில், தீவிரமான பைக் ஆர்வலரான நான், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்லிப்பர் கிளட்ச் வேரியண்ட்டை பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பான டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கலந்த கலவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய உற்பத்தியாளர் ஒருவர் தயாரித்த சூப்பர் பீரிமியம் பைக்கை சொந்தமாக்குவதன் காரணமாக எனக்கு பெருமிதமும் ஏற்படுகிறது என்றார்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RR 310 Launched In India With Slipper Clutch — Priced At Rs 2.27 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X