டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இந்திய முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ், அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல்களை பிஎஸ்6 தரத்தில் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் இவ்விரு பைக்குகளும் தற்சமயம் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

அந்த வகையில் புனேவில் பிஎஸ்6 தர சான்றிதழ் வழங்கும் ஏஆர்ஏஐ அமைப்பின் முகாமிற்கு அருகே இந்த இரு பைக்குகளும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. டிவிஎஸ் நிறுவனம் பொதுவாக இவ்வாறு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படும் பைக்கில் ரைடிங் கியர்ஸை பொருத்தாது. அதே தான் இம்முறையும் நடந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

150-160சிசி பிரிவில் உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் ஆயில்-கூல்டு, 4-வால்வு அமைப்பு உள்ள 159.7சிசி என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 16.8 பிஎச்பி பவரையும் 14.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

கார்ப்ரேட்டட், ஃப்யூல்-இன்ஜெக்டட் என இரு வேரியண்ட்களில் விற்பனையாகி வரும் இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி-ன் தற்போதைய பிஎஸ்4 வேரியண்ட்டின் தயாரிப்பு, பைக் பிஎஸ்6-க்கு அப்டேட் ஆன பிறகு நிறுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

மற்றொரு பைக்கான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 160 4வி மாடலில் உள்ள ஆயில்-கூல்டு அமைப்பிற்கு பதிலாக ஏர்-கூல்டு அமைப்புடன் உள்ள என்ஜினை பெற்றுள்ளது. இதுமட்டுமில்லாமல் சிங்கிள் இண்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் வால்வு போன்றவற்றை ப்ரேத்யமாக இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

கார்ப்ரேட் வேரியண்ட்டில் மட்டும் விற்பனையாகி வரும் இந்த பைக்கின் அதிகப்பட்ச ஆற்றல், 15.12 பிஎச்பி மற்றும் 13.03 என்எம் டார்க் திறன் ஆகும். இந்த பைக் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றப்பட்ட பிறகு இந்த பைக்கிலும் ஃப்யூல்-இன்ஜெக்டட் வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் வழங்கும் என நம்பலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

எரிபொருள் மற்றும் காற்று சரியான விதத்தில் கலப்பதற்கு இந்த ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் பயன்படுகிறது. இது பைக்கின் மாசு உமிழ்வையும் கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்ப்ரேட்டர் வேரியண்ட்டில் ஒன்று அல்லது இரண்டு நிலையான தரத்தில் தான் எரிபொருள் மற்றும் காற்று கலவை நடைபெறுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இதுதவிர பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் இவ்விரு பைக்குகளின் டிசைனிலும் சில மாற்றங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் 200 4வி பைக்கில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் அமைப்பை பெறவுள்ளது. அதேபோல் 200 4வி-ல் உள்ள ப்ளூடூத் இணைப்பையும் இந்த ஆர்டிஆர் 160 4வி பைக் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகள் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இந்த பிஎஸ்6 அப்டேட்டால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்குகளின் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.9,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது. பிஎஸ்6-க்கு மேம்படுத்தப்படுவதால் இவ்விரு பைக்குகளின் ரைடிங்கிலும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.

Most Read Articles
English summary
TVS Apache RTR 160 4V BS6 Spy Pics Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X