அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசிவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், அதன் புகழ்வாய்ந்த அப்பாச்சி வரிசையில் 160 4வி என்ற மாடலை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் களமிறங்கிய இந்த பைக், ரேஸ் பைக்குகளில் இடம்பெறும் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டவாறு களமிறங்கியது.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

அந்தவகையில், இந்த பைக்கின் எஞ்ஜின், தோற்றம் மற்றும் சேஸிஸ் அமைப்பு உள்ளிட்டவை சிறப்பு தன்மையுடையதாக இருக்கின்றன.

இந்த நிலையில், டிவிஎஸ் நிறுவனம் இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை அப்கிரேட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியது.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இந்நிலையில், புதிதாக அப்கிரேட் செய்யப்பட்ட மாடலின் புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்த புகப்படம் மற்றும் தகவலை பைக்வேல் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

இதனை நீங்கள் கீழே காணலாம்...

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இந்த அப்கிரேடில் மிக முக்கியமாக, பைக்கின் ஹெட்லேம்ப் இருக்கின்றது. இதற்கு புத்தம் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அது ஷார்ப் மற்றும் முக்கோணம் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

மேலும், இதன் தோற்றம் டிவிஎஸ் டார்க்கன் கான்செப்ட் மாடலில் இடம் பெற்றிருப்பதைப் போன்று இருக்கின்றது. இந்த பைக்கின் ஹெட்லேம்ப் மற்றும் பின்பக்க விளக்கு என அனைத்தும் எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இதுதவிர, வேறெந்த காஸ்மெடிக் மாற்றமும் இந்த பைக்கில் இடம்பெறவில்லை. அதேசமயம், கூடுதல் சிறப்பு வசதியாக ப்ளூடூத் வசதியுடன் கூடிய எல்சிடி திரை கொடுக்கப்பட உள்ளது. இது, செல்போனை கனெக்ட் செய்ய உதவும். மேலும், கூகுள் மேப் சேவை மற்றும் செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் பேட்டரி பவர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அது நமக்கு வழங்கும்.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே தரத்திலான எஞ்ஜின்தான் தற்போதைய மாடலில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின் புதிதாக அறிமுகமாக பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கேற்ப உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக தங்க நிறத்திலான டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஷன்கள் சாதாரண சாலை மற்றும் பந்தய களம் என அனைத்திலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இத்துடன், ஸ்போர்ட் லுக்கிலான அலாய் வீல் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. இது, அதன் சகோதர மாடலான அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் இடம்பெற்றிருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

இந்த புத்தம் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை டிவிஎஸ் நிறுவனம், மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் டிவிஎஸ் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த விற்பனைக்கு வரும் பட்சத்தில் ரூ. 99,101 என்ற எக்ஸ்-ஷோரும் விலையில் களமிறக்கப்படலாம்.

அப்டேடட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புகைப்படம் கசவு... அதிர்ச்சியில் நிர்வாகம்!

தற்போது வெளியாகியிருக்கும் இந்த பைக்கின் புகைப்படம், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மிகச் சிறப்பான ஸ்டைலில் களமிறங்க இருப்பதை உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த புகைப்படம் அதன் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RTR 160 4V Image Leaked Before Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X