பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் ஸ்கூட்டரின் கிளாசிக் வேரியண்ட்டை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தி இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட்டை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியிருந்தாலும், இந்த புதிய ஸ்கூட்டரில் அதே எரிபொருள்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்தை தான் புகுத்தியுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டராக விளங்கும் டிவிஎஸ்-ன் ஜூபிடர் மாடல், இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இதன் கிளாசிக் வேரியண்ட் ரூ.67,911-ல் இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.

பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள கிளாசிக் வேரியண்ட் கூடுதலாக படத்தில் காட்டப்பட்டுள்ள இண்டிப்ளூ நிற தேர்விலும் விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த அப்டேட்டால் ஜூபிடர் ஸ்கூட்டரின் எரிபொருள் திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் பேஸ், இசட்எக்ஸ் மற்றும் க்ராண்ட், கிளாசிக் என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதில் கிளாசிக் வேரியண்ட் மட்டும் தான் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் மற்ற வேரியண்ட்களும் பிஎஸ்6-க்கு மாற்றப்படவுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினுடன் வெளியாகி வரும் டிவிஎஸ் ஜூபிடர் 7.8 பிஎச்பி மற்றும் 8.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவுகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா? அல்லது இல்லையா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

ஜூபிடரின் இந்த புதிய ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் நிறுவனத்தின் துணை இயக்குனர் அனிருத்தா ஹல்டர், இந்திய போக்குவரத்து பிஎஸ்6 என்ஜின்களுக்கு மாறி வரும் இந்த சூழலை நாங்கள் சரியாக பயன்படுத்தவுள்ளோம்.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

இதற்காக ஆர்டி-எஃப்ஐ மற்றும் இடி-எஃப்ஐ என இரு எஃப்ஐ தொழிற்நுட்ப ஃப்ளாட்ஃபாரங்களை புதிதாக களமிறக்கியுள்ளோம். இதில் இடி-எஃப்ஐ ஃப்ளாட்ஃபராத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜூபிடர் கிளாசிக் வேரியண்ட் பயணம் செய்வதற்கு மிகவும் சவுகரியமாகவும் எரிபொருளில் சிக்கனமாகவும் இருக்கும் என கூறினார்.

ஜூபிடரின் இந்த பிஎஸ்6 கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டருடன், அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி போன்ற பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பைக்குகளையும் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

பிஎஸ்6 தரத்தில் டிவிஎஸ் ஜூபிடரின் கிளாசிக் வேரியண்ட் ஸ்கூட்டர் அறிமுகம்...

ஜூபிடர் மிக விரைவாக 1 மில்லியன் விற்பனையை அடைந்த ஸ்கூட்டர் மாடலாக உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் மொத்தமாக இதுவரை 3 மில்லியன் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Jupiter BS6 India Launch
Story first published: Wednesday, November 27, 2019, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X