வங்காளதேச சாலைகளை கிறங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிள்களைத் தயாரித்து வரும் டிவிஎஸ் நிறுவனம், வங்காளதேசத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓர் செயலினை செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் தனது நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை வங்காளதேசத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் பட்ஜெட் ரக வாகனம் உட்பட சக்தி வாய்ந்த பைக்குகளை தயாரிப்பதில் நாட்டில் முன்னணி வகித்து வருகின்றது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு சந்தையில் அமோகமான வரேவற்பு உண்டு. இந்நிலையில் இந்த நிறுவனம், அதன் சந்தையை விரிவாக்கம் செய்யும் வகையில் வங்காளதேசத்தில் தனது நான்கு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலான அப்பாச்சி ஆர்டிர்160 4வி சிங்கிள் டிஸ்க், மேக்ஸ் 125, மெட்ரோ ஸ்பெஷல் எடிசன் மற்றும் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஆகிய மோட்டார்சைக்கிள்கள் வங்காளதேசத்தில் அறிமுகமாகி உள்ளது. இந்த நான்கு மோட்டார்சைக்கிள்களையும் அறிமுகம் செய்த பின்னர், அந்த நிறுவனத்தின் சார்பாக சர்வதேச தொழில்துறையின் துணைத் தலைவர் ஆர். திலிப் பேசியதாவது,

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

"நாங்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்களை வங்காளதேசத்தின் இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம். இந்த நான்கு மாடல்களும், பெர்ஃபார்மென்ஸ், டியூரபிளிட்டி, கம்ஃபோர்ட் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத்தொடர்ந்து, மேலும், சில மோட்டார்சைக்கிள்களையும் இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்" என்றார்.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

வங்காளதேசத்தில் டிவிஎஸ் நிறுவனம் களமிறக்கி இருக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி சிங்கிள் டிஸ்க் மாடல் மோட்டார்சைக்கிளில், கார்புரேட்டர் 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 வால்வ் ஆயில் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 16.5 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்-லும், 14.8 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியாக இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

இதேபோன்று, டிவிஎஸ் மேக்ஸ் 125 மோட்டார்சைக்கிளில் 123.53 சிசி, 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 11 எச்பி பவரை 8,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 10.8 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இந்த மோட்டார்சைக்கிளின் முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

டிவிஎஸ் மெட்ரோ எடிஸன் பைக்கானது புதிய கிராஃபிக் டிசைன்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில், 3டி குரோம் லோகோ மற்றும் நீளமான இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 100சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கேஎஸ் மேக் என்ற கிக் ஸ்டார்ட் வேரியண்டிலும், இஎஸ் மேக் எனப்படும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, உள்ளூர் சந்தையில் கேஎல்எஸ் மற்றும் இஎல்எஸ் ஆகிய மாடல்களில் விற்பனையாகி வருகிறது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

இந்த மெட்ரோ ரக மோட்டார்சைக்கிள்கள் அதீதமான மைலேஜை வழங்கக்கூடியவை. அவ்வாறு இந்த மோட்டார்சைக்கிளில் 'எக்னோமீட்டர்' எனப்படும் 'எகானாமி மோட்' வழங்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிக்கு அதிகளவிலான மைலேஜை வழங்க உதவும். இதேபோன்று, யெல்லோ எனப்படும் மோடும் வழங்கப்பட்டுள்ளது. இது, எஞ்ஜினை அதிக சக்தியுடன் இயக்க உதவும். நல்ல பெர்ஃபார்மன்ஸை வழங்கும் வகையில் இது கொடுக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

டிவிஎஸ் மெட்ரோ மோட்டார்சைக்கிளில் 4 ஸ்ட்ரோக் டியூரா லைஃப் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 7.4 எச்பி சக்தியை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 7.5 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 ஹெவி டியூட்டி 'ஐ-டச் ஸ்டார்ட்' எனப்படும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆப்ஷனில் வங்காளதேச சந்தையை கலக்க களமிறக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 99.7சிசி கொண்ட 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 4.35 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும், 6.5 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் அக்ஸசெரீஸாக வழங்கப்பட உள்ளது.

வங்காளதேச சாலைகளை கிரங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...!

இந்த நான்கு புத்தம் புதிய மாடல்களையும் டிவிஎஸ் நிறுவனம் கடல் கடந்து கொண்டுபோய் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தைச் சார்ந்து இயங்கும் நிறுவனம் என்பதால், இதன் விற்பனை வங்காளதேசத்தில் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமையும் கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Launches Four New Models In Bangladesh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X