கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்

வெறும் 7 மாதங்களில் புதிய மைல்கல் ஒன்றை டிவிஎஸ் நிறுவனம் எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் (TVS Motor Company) புதிய 110 சிசி கம்யூட்டர் மோட்டார் சைக்கிள் (Commuter Motorcycle) ரேடான் (Radeon). டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிள், இந்தியாவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளை இலக்காக வைத்துதான் ரேடான் மோட்டார் சைக்கிளை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதில், 109.7 சிசி, ட்யூரா லைப் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 8.4 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

இந்தியாவின் 110 சிசி மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பைக்குகளுடன் டிவிஎஸ் ரேடான் போட்டியிட்டு வருகிறது. டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிளில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டருக்கு 69.3 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத குறைவான விலை... இந்தியாவை கலக்கப்போகும் பிரிட்டீஷ் கார் இதுதான்...

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிளில், சிங்க்ரோனைஸ்டு பிரேக்கிங் டெக்னாலஜி (Synchronised Braking Technology) என்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரேக் பிடித்தால் வாகனங்கள் சற்று தூரம் தள்ளி சென்றுதான் நிற்கும். இதனை பிரேக்கிங் டிஸ்டன்ஸ் (Braking Distance) என குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

இந்த பிரேக்கிங் டிஸ்டன்ஸை குறைக்க சிங்க்ரோனைஸ்டு பிரேக்கிங் டெக்னாலஜி உதவி செய்கிறது. அத்துட் ஸ்திரத்தன்மையையும் இது அதிகரிக்கிறது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் நம்பிக்கையுடன் பைக்கை ஓட்ட முடியும். இந்த செக்மெண்ட்டில் இவ்வாறான ஒரு தொழில்நுட்பம் முதல் முறையாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் டிவிஎஸ் ரேடான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

இந்த சூழலில் டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிள் தற்போது புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல். 1 லட்சம் ரேடான் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருப்பதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தற்போது அறிவித்துள்ளது. அதுவும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 7 மாதங்களுக்கு உள்ளாகவே இந்த மைல்கல் எட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

MOST READ: மக்கள் எதிர்பார்த்தது இதுதான்... தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்...

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிளின் ஸ்டைலான தோற்றம் மற்றும் சிறப்பான கையாளுமை ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மோட்டார் சைக்கிளாக டிவிஎஸ் ரேடான் திகழ்கிறது. இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்கள், ''ஸ்கூட்டர்கள் & கார்ப்பரேட் பிராண்டு துணை தலைவர் (மார்க்கெட்டிங்) அனிருதா ஹால்தர் கூறுகையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்...

கடந்த மாதங்களில், வாடிக்கையாளர்களிடம் இருந்து டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களையும், பல்வேறு விருதுகளையும் டிவிஎஸ் ரேடான் மோட்டார் சைக்கிள் குவித்துள்ளது'' என்றார்.

Most Read Articles

English summary
TVS Radeon Crosses 1 Lakh Unit Sales Milestone. Read in Tamil
Story first published: Thursday, April 4, 2019, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X