மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

டிவிஎஸ் நிறுவனம் அதன் கான்செப்ட் மாடலான க்ரையான் அடிப்படையிலான முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க இருப்பதா தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின் விளைவுகளைத் தவிர்க்க, மின் வாகனங்களின் பயன்பாட்டுக்கு மாறுவது கட்டாயமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாட்டின் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் இந்தியச் சாலைகளை எலக்ட்ரிக் வாகனங்கள் ஆளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் இந்த தேவையை அறிந்து தங்களின் மின் வாகனங்களை இந்திய மின் வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோன்று, வெளிநாடு மட்டுமின்றி உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றன.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ், அதன் க்ரையான் ரகத்திலான முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவலை பார்க்கலாம்.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

க்ரையான் மாடலில் இருந்து எழும்பிய ஈர்ப்பு:

டிவிஎஸ் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன காட்சியில் க்ரையான் எனும் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரை அந்த நிறுவனம், எதிர்கால டிசைனிற்கு ஏற்ப உருவாக்கியிருந்தது. அந்த வகையில், இதில் பெரிய அளவிலான எல்இடி மின் விளக்கு அதன் முகப்பு பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இத்துடன், இதன் லுக்கை மிகவும் ரம்மியான தோற்றத்தில் அது வடிவமைத்திருந்தது. ஆகையால், டிவிஎஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே முதலில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்ப்பட்டது.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஆனால், டிவிஎஸ் நிறுவனம் க்ரையான் ரகத்திலான வேறொரு மாடலைதான் தற்போது முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்ப, இந்த ஸ்கூட்டரை க்ரையானைக் காட்டிலும் மாறுபட்ட காட்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சில முக்கிய விஷயங்கள் க்ரையானிடம் இருந்தே பெறப்பட உள்ளது.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

என்டார்க்கின் உதிரி பாகங்கள்:

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முதல் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு பாகங்களை, அந்த நிறுவனத்தின் என்டார்க் ஸ்கூட்டரிடம் இருந்தே பெற உள்ளது. அந்தவகையில், அந்த ஸ்கூட்டரின் வீல், சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவற்றைப் பகிர இருக்கின்றது. இந்த நடவடிக்கையால், எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகரிக்கும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

அதீத சக்தி வாய்ந்த பேட்டரிகள்:

டிவிஎஸ்-இன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சக்தி வாய்ந்த பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட உள்ளன. இது ஸ்கூட்டருக்கு அதிக பயணிக்கும் ரேஞ்சை வழங்கும். அந்த வகையில், 12kW திறன் கொண்ட மூன்று லித்தியம் அயன் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, வெறும் 60 நிமிடங்களிலேயே 0த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும் திறன்கொண்டவை. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை செல்லலாம்.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

தொழில்நுட்ப அம்சங்கள்:

என்டார்க் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களே இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட உள்ளன. அந்தவகையில், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியான ப்ளூடூத் அம்சம், பேட்டரி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்கும் டிஸ்பிளே ஆகியவை பொருத்தப்பட உள்ளன. இத்துடன், நேவிகேஷன், கடைசியாக பார்க்கிங் செய்யப்பட்ட இருப்பிடம் உள்ளிட்டவற்றை வழங்கும் சிறப்பு வசதியும் இதில் இணைக்கப்பட உள்ளன.

மலிவான விலையில் களமிறங்க இருக்கும் டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக்...? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

அறிமுகம் எப்போது:

பல்வேறு பிரத்யேகமான மற்றும் சிறப்பு வசதிகளைப் பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் நடப்பாண்டின் நிதியாண்டிலேயே அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஏத்தர், ஒக்கினவா உள்ளிட்ட நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor To Launch Electric Scooter This Financial Year — Could Be The Creon Concept. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X