ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

டிவிஎஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடலான அப்பாச்சி ஆர்ஆர்310 மாடலின் ஸ்போர்ட் வேரியண்டை கொலம்பியாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

தெற்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், அதன் புகழ்பெற்ற மாடலான அப்பாச்சி ஆர்ஆர்310 மாடல் மோட்டார்சைக்கிளின் ஸ்போர்ட் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கு மிகவும் ஸ்போர்ட்டியான லுக்கை வழங்கும் வகையில், யூனிக் பெயிண்டிங் ஸ்கீம் மற்றும் கிராஃபிக்ஸுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த சிறப்பான நடவடிக்கை, மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட்டியான லுக் மட்டுமின்றி மிகவும் கவர்ச்சியான லுக்கையும் வழங்குகின்றது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

அதற்கேற்ப மோட்டார்சைக்கிளின் அனைத்து பேனல்களிலும் அதிகளவில் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த மோட்டார்சைக்கிளை சற்று நீண்ட இடைவெளியில் இருந்து பார்த்தால், டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சு பைக் என்ற தோற்றத்தைக்காட்டிலும், நவீன ஸ்போர்ட் மாடல் பைக்கைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

இத்துடன், இந்த மோட்டார்சைக்கிள் கருப்பு மற்றும் சிவப்பு நிற வண்ண கலவைகளால் மேலும் கவர்ச்சி தன்மையைப் பெற்றுள்ளது. இதுபோன்ற காஸ்மெட்டிக் சேன்ஜ் மட்டுமின்றி, இதன் மெக்கானிக்கல் விஷயத்திலும் அந்த நிறுவனம் சிறு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

அந்த வகையில், அப்பாச்சி ஆர்ஆர் 310 மோட்டார்சைக்கிளில் 310சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிணடர், லிக்யூடு கூல்ட், ஃப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். மேலும், 27.3 என்எம் டார்க்கை 7,700 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். இத்துடன், எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப அம்சங்களாக இந்த மோட்டார்சைக்கில் வெர்டிக்கல்லி ஸ்டேக்கட் முழுமையான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது வாகனத்தின் வேகம், ப்யூவல் லெவல் உள்ளிட்ட பல்வேறு தகவலை நமக்கு வழங்கும்.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

கொலம்பியா இருசக்கர வாகனச்சந்தையில், டிவிஎஸ் நிறுவத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு அதிகளவு வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே இந்த நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் கொலம்பியாவுக்கு முன்னுரிமைய வழங்குகிறது. இதனடிப்படையிலேயே இந்த ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

அந்தவகையில், அண்மையில் டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சியின் கார்பன் எடிசன் வேரியண்டான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வோல்ட் மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வோல்ட் ஆகிய மாடல்களை இரு மாடல்களை அங்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டார்சைக்கிள், கொலம்பிய மக்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்தவகையில், மோட்டார்சைக்கிளுக்கு மேட் பிளாக் வண்ணம் ஆப்ஷனலாக வழங்கப்பட்டது.

ஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி!

டிவிஎஸ் நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் கூட்டணியில் செயல்திறன் வாய்ந்த பைக்குகளைத் தயாரித்து வருகின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான், அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் மோட்டார்சைக்கிள். அதேசமயம், இதே கூட்டணிதான் பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310 ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய பைக்குகளை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Unveils Sportier Edition Of Apache RR 310. Read In Tamil.
Story first published: Saturday, May 18, 2019, 12:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X