மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

இந்திய பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், மாற்றுத்திறனாளிகளும் சிறியவர்களும் எளிதாக ஓட்டி செல்லும் வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 பைக்கில் பொருத்தக்கூடிய கிட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 11,237 ரூபாயில் மட்டுமே விற்கப்பட உள்ள இந்த கிட் ஏஆர்ஏஐ சான்றிதழ் பெற்றது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கிட்டை ஓசூரில் உள்ள தனது சொந்த தொழிற்சாலையில் தயாரித்துள்ளது. எக்ஸ்எல் 100 பைக்கில் கச்சிதமாக பொருந்துவதற்கு ஆறு ஸ்க்ரூ புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பைக்குடன் இந்த கிட்டை 16 இன்ச் உலோகம் இணைக்கிறது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

பைக்கின் இயக்கத்திலும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள இரு சக்கரங்கள் ஒரே சமநிலையுடன் இருப்பதற்காக இரும்பு ஃப்ரேம் ஒன்று இரண்டையும் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மற்ற பைக்குகளின் கிட்களை விட சிறந்த தோற்றத்தை கொண்டுள்ள எக்ஸ்எல் 100 பைக்கின் இந்த கிட் அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

மோசமான சாலைகளிலும் எக்ஸ்எல் 100 பைக் நிலை தடுமாறாமல் செல்ல கூடுதலாக நான்கு சஸ்பென்ஷன்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய கிட்டில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுக்கோள்களை வைக்கவும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

தற்போதைக்கு எக்ஸ்எல் 100 பைக்கில் மட்டுமே பொருத்தப்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கிட்டை மிக விரைவில் மற்ற வாகனங்களுக்கும் ஏற்றாற் போல் டிவிஎஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

இதுதவிர டிவிஎஸ் 100 பைக்கை பொறுத்த வரை, ஸ்டாண்டர்ட், கம்ஃபர்ட் மற்றும் ஹெவி ட்யூட்டி என மூன்று வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதன் 99.7சிசி ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் 4.3 பிஎச்பி பவரையும் 6.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த என்ஜினுடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள், எளிதாக பராமரிக்கும் வகையிலான பேட்டரி, அனலாக் ஸ்பீடோமீட்டர், கிட் ஸ்டார்ட் மற்றும் டர்ன் சிக்னல் இண்டிகேட்டர் பல்ப்ஸ் போன்றவை இந்த மொபெட் பைக்கில் உள்ள அம்சங்களாகும்.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

4.0 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் வெளியாகி வரும் இந்த பைக் ஒரு லிட்டருக்கு 60 கிமீ இயங்கும் திறனுடையது. இந்த மொபெட்டின் அதிகப்பட்ச வேகம் 60 kmph ஆகும். சுமார் 130 கிலோ எடை வரை சுமந்து செல்லும் இந்த எக்ஸ்எல் 100 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.29,000ல் இருந்து ரூ.32,000 வரை உள்ளது.

மாற்று திறனாளிகளுக்கென எக்ஸ்எல் 100 பைக்கில் கூடுதல் மாற்றத்தை கொண்டுவந்த டிவிஎஸ்...

எக்ஸ்எல் 100 பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் மாற்றுத்திறனாளிக்காக இவ்வாறு கிட் அமைப்பை வழங்கியிருப்பது வியாபார நோக்கத்தை தாண்டி உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம். எக்ஸ்எல் 100 பைக்கை போன்று மற்ற பைக்குகளுக்கும் கிட்டை டிவிஎஸ் நிறுவனம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் வேண்டுக்கோள்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS XL 100 Retro-Fitment Kit Launched At Rs 11,237
Story first published: Monday, November 18, 2019, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X