நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் இருந்து டிவிஎஸ் எக்ஸ்எல் விடை பெற போகிறதா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட்டில் தற்போது பல்வேறு அதிநவீன பைக்குகள் கிடைக்கின்றன. ஆனால் அவை எல்லாம் டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL) என்ற சின்னஞ்சிறு மொபட்டிற்கு ஈடாகுமா? என்பது சந்தேகமே. கடந்த பல ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆண்டு கொண்டிருக்கும் அரசன் டிவிஎஸ் எக்ஸ்எல்.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இந்தியாவில் தற்போது விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரே மொபட் (Moped) டிவிஎஸ் எக்ஸ்எல் மட்டுமே. இந்திய மக்கள் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை அளவு கடந்து நேசிக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டும் அந்தந்த குடும்பங்களில் ஒரு உறுப்பினரை போன்றதுதான்.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

மிகவும் விலை உயர்ந்த சுஸுகி ஹயபுசா, கவாஸாகி நின்ஜா உள்ளிட்ட பைக்குகளில் தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் அனேகமாக டிவிஎஸ் எக்ஸ்எல் மூலமாகதான் எப்படி வண்டி ஓட்டுவது? என்பதையே கற்று கொண்டிருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

அரிசி மூட்டை, காய்கறி, பழங்கள் என ஏதாவது ஒன்றை சுமந்து கொண்டு டிவிஎஸ் எக்ஸ்எல் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இன்றும் ஓடி கொண்டேதான் இருக்கிறது. டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில், ஏர் கூல்டு, 99.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4.3 பிஎச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகவும் டிவிஎஸ் எக்ஸ்எல் திகழ்ந்து வருகிறது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

டிவிஎஸ் எக்ஸ்எல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனை விற்பனையாகி கொண்டுள்ளது. இதில், ரூ.30 ஆயிரம் விலையில் கிடைக்கும் பேஸ் வேரியண்ட்டில் கிக் ஸ்டார்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இப்படிப்பட்ட சூழலில்தான் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கு வில்லனாக வந்தன. மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் இந்தியாவில் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன. இது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையே மாற்றி அமைக்கவுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

கார் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் தங்கள் மாடல்களின் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாடலை மார்க்கெட்டில் இருந்து விலக்கி கொள்ள வேண்டியதுதான்.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய முடியாது என வாகன உற்பத்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாடல்கள் இந்திய மார்க்கெட்டை விட்டு பிரியாவிடை பெறவுள்ளன. இதில், பல்வேறு மாடல்கள் இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டவை.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இந்த வரிசையில் டிவிஎஸ் எக்ஸ் மொபட்டும் சேர்ந்து விடுமோ? என்ற அச்சம் மக்களை நீண்ட நாட்களாகவே வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மக்களின் இந்த கேள்விக்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தற்போது உறுதியான பதிலை வழங்கியுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படவுள்ளது என்பதுதான் அந்த பதில். இதனால் இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் பிஎஸ்-6 சகாப்தத்திலும் இந்திய சாலைகளை கலக்கவுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்பும், இந்தியாவில் எக்எஸ்எல் விற்பனை செய்யப்படும் என்பதை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தற்போது உறுதி செய்துள்ளது. இதன்மூலம் மக்கள் மனதில் இருந்து வந்த அச்சம் சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

டிவிஎஸ் எக்ஸ்எல் நீடித்து உழைக்க கூடியது. நம்பகத்தன்மை வாய்ந்தது. இந்தியாவின் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் உற்றான தோழனாக இது விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் அப்டேட் செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்?

இதுதொடர்பாக MoneyControl செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வது சற்று சவாலான காரியம்தான். இதற்கு பல்வேறு மாடிபிகேஷன்களை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS XL To Get The BS-VI Upgrade — India’s Much-Loved Moped Set For A Run In The BS-VI Era. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X