அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு!

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனம் எஃப்-77 என்ற பெயரிலான முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தைக்கு கொண்டு வரப்படாமல் இருந்து வந்தது.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி!

இந்த நிலையில், அடுத்த மாதம் 13ந் தேதி தனது எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக அல்ட்ராவைலட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலுக்கு இணையான செயல்திறனை பெற்றிருக்கும்.

புரோட்டோடைப் மாடலில் இருக்கும் அதே சிறப்பம்சங்களுடன் இந்த புதிய எஃப்-77 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்த பைக் 200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் பைக்கிற்கு இணையான செயல்திறனை பெற்றிருக்கும்.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் 33 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார பைக் 0 -100 கிமீ வேகத்தை 8 வினாடிகளுக்குள் எட்டிவிடும். மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கும்.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி!

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கினஅ பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இந்த பைக்கினஅ உண்மையான தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் 13ந் தேதி முழு விபரங்களையும் எதிர்பார்க்கலாம்.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கு ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் அளிக்கப்படும்.

MOST READ: புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி!

இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும், புளூடூத் இணைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்காக பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலியும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

MOST READ: போர்ஷே டைகன் 4எஸ் எலெக்ட்ரிக் காரின் குறைவான விலை மாடல் அறிமுகம்

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் ரூ.2.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக பெங்களூர் நகரில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அடுத்தடுத்து நாட்டின் பிற நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

Most Read Articles

English summary
Ultraviolette Automotive — a Bangalore-based electric motorcycle manufacturer, has announced the unveiling of its first product, the F77 on the 13th November 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X