Just In
- 6 hrs ago
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- 8 hrs ago
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்
- 8 hrs ago
ஜீப் காம்பஸின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...
- 9 hrs ago
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி!
Don't Miss!
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Technology
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்!
பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக செயல்திறன் மிக்க இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வந்திருக்கும் இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மிக மிரட்டலான டிசைன், பிரிமீயம் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக் லைட்னிங், ஷேடோ, லேசர் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்த பைக்கில் இருக்கும் ஏர்கூல்டு பர்மனென்ட் மேக்னெட் ஏசி மின் மோட்டார் அதிகபட்சமாக 33.5 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் ஆகிய டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பைக் 0 - 60 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளிலும், 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளிலும் கடக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 147 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் வந்துள்ளது.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் 4.2kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 1.5 மணிநேரத்தில் முழுமயைாக சார்ஜ் செய்ய முடியும்.

ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் மூன்று தொகுப்புகளாக பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுப்புகளும் ஒரே நேரத்தில் இயங்கும் அவசியமில்லை. ஆனால், அனைத்தும் சேர்ந்து இயங்கும்போது அதிகபட்ச செயல்திறனை பெற முடியும்.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக்கில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் வகை ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுனஅ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன.
MOST READ: கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
MOST READ: இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி!

இந்த பைக்கில் முன்புறத்தில் 110/70-R17 அளவுடைய டயரும், பின்புறத்தில் 150/60-R17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் 158 கிலோ எடை கொண்டது.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு பேனியர்கள், போர்ட்டபிள் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் க்ராஷ் கார்டுகள் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 பைக்கிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு வர இருக்கிறது.