இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம், இந்திய அரசின் உத்தரவிற்கு இணங்கும் வகையிலான மாற்றங்களை அடுத்த 2 மாதங்களில் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் (UM Motorcycles) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தற்போது விற்பனை செய்து வரும் தனது அனைத்து மாடல்களையும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அப்டேட் செய்யவுள்ளது. அத்துடன் புதிய மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 4 யுஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அடுத்த 2 மாதங்களுக்கு உள்ளாக ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

அதன்பின் ரெனகேட் ட்யூட்டி எஸ் (Renegade Duty S) மற்றும் ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் வேகாஸ் எடிசன் (Renegade Sports S Vegas Edition) ஆகிய 2 புதிய பைக்குகளை யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது அனைத்து பைக்குகளிலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியை ஸ்டாண்டர்டாக வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

இந்தியாவில் தற்போதைய நிலையில், ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் (Renegade Sports S), ரெனகேட் கமாண்டோ (Renegade Commando), ரெனகேட் மோஜவே (Renegade Mojave) மற்றும் ரெனகேட் கிளாசிக் (Renegade Classic) ஆகிய 4 மாடல்களை யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அழகியல்தான் இந்த 4 மாடல்களுக்கும் இடையே உள்ள பொதுவான வித்தியாசமாக உள்ளது. இதுதவிர ரைடிங் பொஷிஸன் மற்றும் எர்கோனாமிக்ஸ் ஆகிய அம்சங்களிலும் சிறிய அளவிலான வித்தியாசங்கள் உள்ளன.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

ஆனால் அடிப்படை மெக்கானிக்கல் அம்சங்களில் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ஒன்று போலவே உள்ளன. யுஎம் ரெனகேட் குடும்ப மோட்டார் சைக்கிள்களில், லிக்யூட் கூல்டு, 279.5 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.75 பிஎச்பி பவர் மற்றும் 23 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

முன்னதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் புதிய உத்தரவு ஒன்று அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இந்தியாவில் விற்பனையாகும் 125 சிசிக்கும் குறைவான அனைத்து டூவீலர்களிலும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், 125 சிசிக்கும் அதிகமான அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மனதில் வைத்துதான் இந்த அதிரடியான உத்தரவை இந்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

அரசின் விதிமுறைகளுக்கு இணங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகதான் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது மாடல்களில் ஏபிஎஸ் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை வழங்குவதன் காரணமாக, யுஎம் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவன மாடல்களின் விற்பனை சற்று மந்தமாகதான் உள்ளது. இந்த சூழலில் உயரவுள்ள விலை, விற்பனையில் இன்னும் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து பைக்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

இதனிடையே வரும் மாதங்களில், ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் வேகாஸ் எடிசன் மற்றும் ரெனகேட் ட்யூட்டி எஸ் ஆகிய இரண்டு மாடல்களை யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் வேகாஸ் எடிசன் மாடலானது, ஸ்போர்ட்ஸ் எஸ் மாடலின் ஃபேன்ஸியர் வெர்ஷன் ஆகும். எனவே அழகியல் சார்ந்த மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும். எஞ்சியபடி மெக்கானிக்கல் அம்சங்கள் அனைத்தும் ஒன்று போலவே இருக்கும்.

இந்திய அரசின் அதிரடிக்கு கீழ்படிந்த அமெரிக்க நிறுவனம்... 2 மாதங்களில் நடக்கவுள்ள மாற்றம் இதுதான்...

இரண்டாவதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் மாடலான ரெனகேட் ட்யூட்டி எஸ் மோட்டார்சைக்கிள், 2018 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலேயே வெளியிடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யுஎம் ரெனகேட் ட்யூட்டி எஸ் மாடலில், ஏர் கூல்டு, 223 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 16.96 பிஎச்பி பவர் மற்றும் 17 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
UM Motorcycles To Get ABS As Standard Equipment; Two New UM Bikes Coming-Up. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X