அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் கடும் சோதனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் வெறும் 12 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தற்போது ரெனகேட் கமாண்டோ, ரெனகேட் கமாண்டோ மோஜிவே, ரெனகேட் கமாண்டோ கிளாசிக் மற்றும் ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஆகிய 4 மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

Autopunditz வெளியிட்டுள்ள சேல்ஸ் டேட்டாவின் படி, கடந்த மார்ச் மாதத்தில், யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் வெறும் 8 ரெனகேட் கமாண்டோ மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 316 ரெனகேட் கமாண்டோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

அதே சமயம் கடந்த மார்ச் மாதத்தில் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில், 3 ரெனகேட் கமாண்டோ கிளாசிக் பைக்குகளையும், ஒரே ஒரு ரெனகேட் கமாண்டோ மோஜிவே பைக்கையும் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இந்தியாவில் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

துரதிருஷ்டவசமாக யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் பைக்கை கூட விற்பனை செய்யவில்லை. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இதே மாதத்தில், 220 ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் மோட்டார்சைக்கிள்களை யுஎம் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

யுஎம் நிறுவன மோட்டார்சைக்கிள்கள் தங்கள் விலை செக்மெண்ட்டில், மஹிந்திரா மோஜோ, ஜாவா மற்றும் ராயல் என்பீல்டு மாடல்களுடன் போட்டியிட்டு வருகின்றன. ஆனால் தங்கள் போட்டியாளர்கள் அளவுக்கு யுஎம் மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. யுஎம் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை சரிவடைந்திருப்பதற்கு இது மிக முக்கியமான காரணம்.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

யுஎம் நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும், 279.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 25.15 பிஎஸ் பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 23 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

இந்த மோட்டார்சைக்கிள்கள் அனைத்தின் முன் பகுதியிலும் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 130 மிமீ ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், யுஎம் நிறுவனம் இன்னும் தனது ஒரு மாடலில் கூட ஏபிஎஸ் பிரேக் வசதியை அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் அனைத்து யுஎம் மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஏபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவில் வந்த சோதனை இதுதான்... என்னவென்று நீங்களே பாருங்கள்...

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரெனகேட் கமாண்டோ கிளாசிக் மற்றும் ரெனகேட் கமாண்டோ மோஜிவே ஆகிய இரண்டு மாடல்களையும், கடந்த மார்ச் 20ம் தேதிதான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவற்றின் விலை முறையே ரூ.1.89 லட்சம் மற்றும் 1.80 லட்சம் ஆகும். இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
UM Sold Only 12 Motorcycles In March 2019 In India. Read in Tamil
Story first published: Thursday, April 25, 2019, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X