2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு பைக்கான புதிய தலைமுறை தண்டர்பேர்டை பிஎஸ்6 தரத்தில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதனால் இந்த புதிய பிஎஸ்6 பைக் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

அந்த வகையில் தற்போது முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் நமக்கு பல தகவல்களை தரும் விதத்திலான தோற்றத்தை பெற்றுள்ளது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

புதிய பின்புற டிசைன், புதிய வடிவில் பெட்ரோல் டேங்க், முன்புற பேனல்கள் போன்றவை இந்த புதிய டிசைன் அமைப்பில் உள்ளன. இதுமட்டுமின்றி பின்புற ஃபெண்டர்களையும் இருக்கையையும் புதிய வடிவில் இந்த பைக் பெற்றுள்ளது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் பிஎஸ்6 தண்டர்பேர்டு பைக் புதிய அலாய் சக்கரங்களையும், வட்ட வடிவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளட்டரையும் கொண்டிருப்பது தெரிய வருகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்சமயம் தண்டர்பேர்டு பைக்கை இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்து வருகிறது. இந்த தேர்வில் சிறிய என்ஜினாக 346சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் யூனிட், 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரையும் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச ஆற்றலாக கொண்டிருக்கிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

மற்றொரு என்ஜின் தேர்வாக உள்ள 499சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 5,250 ஆர்பிஎம்-ல் 27.2 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் விரைவில் தனது 500சிசி பைக்குகளான தண்டர்பேர்டு, கிளாசிக் மற்றும் புல்லட் வகை பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். ஏனெனில் இந்த பைக்குகளின் என்ஜினை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்வது செலவு மிகுந்த வேலையாக உள்ளது. அதுமட்டுமின்றி இவற்றின் விற்பனையும் குறைந்து வருகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1,56,658-க்கும், இதன் 500சிசி பைக் ரூ.1.90 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தண்டர்பேர்டு மாடலின் மற்றொரு வெர்சனான தண்டர்பேர்டு 350எக்ஸ் ரூ.1.63 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 500எக்ஸின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு தண்டர்பேர்டு அடுத்த ஆண்டு மாற்றப்பட்ட பிறகு எந்த பைக்குடனும் இந்திய மார்க்கெட்டில் போட்டியிட முடியாது. இந்த பைக் கொண்டிருக்கும் விலைகளினால் மட்டும் பஜாஜ் டாமினார் 400 மற்றும் ஜாவா 42 பைக்குகளுடன் போட்டியிடும்.

Most Read Articles
English summary
All-New 2020 Royal Enfield Thunderbird Spied Undisguised; Launch Soon
Story first published: Friday, December 6, 2019, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X