முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

யமஹா நிறுவனம், அதன் அப்கமிங் மாடலான எம்டி-25 பைக்கில் புதிய சிறப்பு வசதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில், யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளும் முக்கிய இடத்தில் இருக்கின்றன. இந்த நிறுவனம், பெரும்பாலும் இளைஞர்களைக் கவரும் விதமாகவே அதன் தயாரிப்புகளை உற்பத்திச் செய்து வருகின்றது.

அந்தவகையில், யமஹாவின் பல தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கோடிக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இந்நிலையில், யமஹா நிறுவனம், அதன் எம்டி-25 என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த, தகவலை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான புதிய வருகையாக இருக்கும் எம்டி-25 பைக்கில் அட்வான்ஸ்ட் இசியூ சிஸ்டம் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

அந்த சிஸ்டம், தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்25 மற்றும் ஆர்3 பைக்குகளைக்காட்டிலும் அட்வான்ஸ்டானது என கூறப்படுகின்றது. இசியூ என்பது எஞ்ஜின் கண்ட்ரோல் யூனிட் என்பதாகும். இது, பைக்கின் அனைத்து மின்னணு செயல்பாடுகளையும் கட்டுபடுத்தும் தன்மைக் கொண்டது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

மேலும், இது எரிபொருள் அதிக பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகின்றது. அந்தவகையில், எரிபொருளுடன் காற்று கலப்பதைத் தவிர்க்க இது பயன்படுகின்றது. முக்கியமாக, இந்த திறன் ப்யூவல் இன்ஜெக்டட் மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்படுகின்றது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால், யமஹாவின் அப்கமிங் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் இசியூ சாதனம், எந்தவகையில் திறன் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது, என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், யமஹா நிறுவனம் இந்த புதிய இசியூ சிஸ்டத்துடன் வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷனையும் (விவிஏ) அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதிய அம்சமானது, இசியூ சிஸ்டத்தின் பணியை மேலும் சிறப்பானதாக மாற்ற உதவும்.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இந்த விவிஏ சிஸ்டத்தை யமஹா நிறுவனம், தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்15 மாடலில் பயன்படுத்தி வருகின்றது. இது பைக்கின் அதீதி திறனை சமமாக வெளிப்படுத்த உதகின்றது.

விரைவில் புதிதாக விற்பனைக்கு களமிறங்க இருக்கும் எம்டி-25 பைக் 250 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின் ட்வின் சிலிண்டர், டிஓஎச்சி, லிக்யூடு கூல்ட் யுனிட்டைப் பெற்றிருக்கின்றது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இது 36 பிஎஸ் பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக, அதன் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த பைக்கினை அழகுபடுத்தும் நடவடிக்கையாக, பைக்கின் முன் பக்கத்தில் அப்சைட்-டவுன் சஸ்பென்ஷன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இத்துடன், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக, இரண்டு டிஸ்க் பிரேக்குடன் கூடிய ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவும்.

இதைத்தொடர்ந்து, கூடுதல் வசதியாக எம்டி-25 பைக்கில் எல்இடி தரத்திலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சமானது, அதன் உடன்பிறப்பு மாடலான எம்டி-15 பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

மேலும், இந்த அப்டேட் மோட்டார்சைக்கிளில் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதே ரகத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலைதான் யமஹா ஆர்3 பைக் பெற்றுள்ளது. இது, பைக்கின் ஸ்பீடோ மீட்டர், பெட்ரோல் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும்.

முன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்!

இத்தகைய சிறப்பு வசதிகளைப் பெற்ற இந்த பைக்கின் அறிமுகம்குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Updated Yamaha MT-25, its Advanced More Than YZF-R3. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X