வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனங்கள் பிரிமீயம் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. வெவ்வேறு ரக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 125 சிசி மற்றும் 150 ரக ஸ்கூட்டர் மாடல்களை இரு நிறுவனங்களும் விற்பனை செய்து வருகின்றன.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

இந்த நிலையில், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை ரூ.1,033 முதல் ரூ.2,274 வரை மாடலுக்கு தக்கவாறு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டரின் விலை ரூ.1,033 வரையிலும், ஏப்ரிலியா ஸ்டோர்ம் 125 ஸ்கூட்டர் விலை ரூ.1,674 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!
Model Old Price New Price
Aprilia Storm 125 Rs 66,268 Rs 67,942
Aprilia SR 125 Rs 72,658 Rs 73,691
Aprilia SR 150 Standard Rs 83,766 Rs 85,058
Aprilia SR Carbon Rs 86,837 Rs 88,129
Aprilia SR 150 Race Rs 92,742 Rs 94,305
Vespa Urban Club 125 Rs 73,462 Rs 74,496
Vespa ZX 125 Rs 81,564 Rs 82,856
Vespa VXL 125 Rs 91,350 Rs 92,642
Vespa SXL 125 (Matte Black, White, Orange, Blue) Rs 94,651 Rs 95,943
Vespa SXL 125 (Matte red Dragon, Matte Yellow) Rs 95,724 Rs 98,141
Vespa VXL 150 Rs 101,740 Rs 103,394
Vespa SXL 150 (Matte Black, White, Orang, Blue) Rs 105,792 Rs 108,516
Vespa SXL 150 (Matte Red Dragon, Matte Yellow) Rs 106,862 Rs 108,516
Vespa VXL 150 (Elegante) Rs 112,263 Rs 113,917

Price Table Courtesy: Bikewale

மறுபுறத்தில் வெஸ்பா ஸ்கூட்டர்களின் விலை ரூ.,1034 முதல் ரூ.2,424 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டரின் விலை அதிகபட்ச விலை உயர்வை கண்டுள்ளது. கடந்த 1ந் தேதி முதலே இந்த விலை உயர்ரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெஸ்பா தெரிவிக்கிறது. விலை உயர்வு விபரங்களை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

ஒருபுறத்தில் ஸ்கூட்டர்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், மறுபுறத்தில் பண்டிகை காலத்திற்காக ரூ.10,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

ரூ.4,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ், முதல் ஆண்டுக்கு லேபர் கட்டணம் இல்லாமல் பராமரிப்பு பணிகள், 5 ஆண்டுகளுக்கான வாரண்டியும், இலவச சாலை அவசர உதவி திட்டம் மற்றும் பேடிஎம் கேஷ் பேக் சலுகை உள்ளிட்டவை மூலமாக ரூ.6,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

Most Read: வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் 125 சிசி மற்றும் 150 சிசி ரக எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ரகத்திலான ஸ்கூட்டர்களில் பிரிமீயம் மாடல்களாக இவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தனி வாடிக்கையாளர் வட்டத்துடன் வர்த்தகத்தை தொடர வைத்துள்ளன.

Most Read: புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது!

வரும் பண்டிகை காலத்தில் பிரிமீயம் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளோர் வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை சேமிப்புச் சலுகைகளுடன் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. போட்டியாளர்களைவிட இவை மிகவும் தனித்துவமான மாடல்களாகவும் உள்ளன.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Piaggio has hiked prices of the entire Vespa and Aprilia lineup of scooters sold in India. The hike in prices vary between each model, ranging from Rs 1,033 to Rs 2,724. The increase in prices of the scooter from both brands has already been implemented from 1st September.
Story first published: Saturday, September 14, 2019, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more