கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டர்!

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

கடந்த 1ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளின்படி, ஸ்கூட்டர்களை சிபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் மேம்படுத்தி வருகிறது வெஸ்பா நிறுவனம். அந்த வகையில், எல்எக்ஸ்125 ஸ்கூட்டருக்கு மாற்றாக வரும் புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டர் டீலர்களை வந்தடைய தொடங்கி உள்ளது.

அவ்வாறு டீலரில் நிறுத்தப்பட்டிருக்கும் வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரின் ஸ்பை படங்களை பைக்வாலே தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

அத்துடன், முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது. புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டர் ரூ.77,481 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.81,981 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று பைக்வாலே தெரிவிக்கிறது.

சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் டிஸ்க் பிரேக் தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. எல்எக்ஸ்125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 125சிசி எஞ்சின்தான் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.76 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

மேலும், வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டாலும், எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான தரத்தை பெற்றிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இதன் எஞ்சினை மேம்படுத்தும் அவசியம் இருக்கிறது.

இந்த எஞ்சினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை கொடுத்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு வெஸ்பா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Vespa ZX125

வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரில் மோனோகாக் ஸ்டீல் பாடி பயன்படுத்தப்பட்டு இருப்பதால் உறுதியான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. அதேபோன்று, விமானங்களில் இருப்பது போன்று, ஒற்றை சைடு ஆர்ம் என்ற தாங்கி அமைப்பு இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சம். பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 150 மிமீ டிரம் பிரேக்கும், பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. ஆப்ஷனலாக முன்சக்கரத்திற்கான 200 மிமீ டிஸ்க் பிரேக்கும் கிடைக்கிறது.

புதிய வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டரானது பிரிமீயம் மாடலாக இருக்கிறது. எனினும், 125 சிசி ரகத்தில் ஹோண்டா க்ரேஸியா, சுஸுகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா
English summary
Italian scooter marque Vespa has started updating its lineup of scooters with the new combi-braking systems. Bikewale has spotted a brand new model in the Vespa lineup at a dership. The publication claims that new Vespa ZX 125 will replace the LX125 in the Italian scooter marque's lineup in India.
Story first published: Thursday, April 4, 2019, 22:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X