எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் மின்சார வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. எதிர்கால உலகை மின்சார வாகனங்கள்தான் ஆளப்போகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, மிகவும் பிரபலமான ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை தற்போதே சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டும் ஒன்று. இந்தியாவில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றி அசத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

லிஜூ வைத்யன் என்பவர் பேஸ்புக்கில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோக்கள் நமக்கு காட்டுகின்றன. ஹவுண்ட் எலெக்ட்ரிக் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

புதிய எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாகவே, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலை, ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

வழக்கமான ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் 30-40 சதவீதம் வரை விலை உயர்ந்தவை என ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் எலெக்ட்ரிக் பாகங்களின் அதிகப்படியான விலை ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் வழக்கமான வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற சரியாக எவ்வளவு செலவாகும்? என்பது போன்ற தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. ஒரு கிட் மூலமாக வழக்கமான மோட்டார்சைக்கிளை எலெக்ட்ரிக் மாடலாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு அறிந்த மெக்கானிக்குகள் மூலம் இந்த கிட்டை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இந்த கிட்டை இன்ஸ்டால் செய்வதற்கு சேஸிஸில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. அத்துடன் மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு தெரிந்த ரெகுலர் மெக்கானிக்குகளால், இந்த ஹார்ட்வேரை பொருத்த முடியும். அதே சமயம் பேட்டரிகளை இணைக்கவும், அதனை இயங்க வைக்கவும் எலெக்ட்ரீசியன் ஒருவர் தேவைப்படுவார்.

ஆனால் இந்த தயாரிப்பு இன்னும் உற்பத்திக்கு தயாராகவில்லை. அத்துடன் ஆர்டிஓ-வாலும் இது சோதித்து பார்க்கப்படவில்லை. எனவே இந்த கிட்களுக்கு இன்னும் ஆர்டிஓ சான்றும் இல்லை. ஹவுண்ட் எலெக்ட்ரிக் உருவாக்கியுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் லித்தியம் அயான் பேட்டரியை பெற்றுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் மற்றும் இதன் பவர் எவ்வளவு? என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.

Most Read Articles
English summary
Watch Royal Enfield Classic 350 Electric Motorcycle - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X