சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

கேடிஎம்-இன் டியூக்390 பைக் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, கல்மீது மோதியுள்ளது. இதுகுறித்த இரண்டு வீடியோக்களை அந்த பைக்கின் உரிமையாளர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த முழுதகவலை இந்த பதிவில் காணலாம்.

சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

ஆஸ்திரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம் வாகன தயாரிப்பு நிறுவனம், இளைஞர்களைக் கவரும் விதமாக ஸ்டைலான ஸ்போர்ட் லுக் மாடல் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேடிஎம் டியூக் 390 மாடல் பைக்கை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

இந்த பைக்கின் தோற்றம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மதிமயங்கிய இளைஞர்கள், இந்த பைக்கை வாங்கத் தொடங்கினார்கள். அவ்வாறு, இந்த பைக்கை சமீபத்தில் வாங்கிய ராகவ் என்ற இளைஞர், ஓர் இடையூறைச் சந்தித்துள்ளார். இதுகுறித்த, இரண்டு வீடியோக்களை அவர் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

அந்த வீடியோவில், ராகவ், தனது புத்தம் புதிய கேடிஎம் டியூக்390 பைக்கில் சாலையில் செல்லும்போது சிறிய கல்மீது பைக் மோதியுள்ளார். அந்த மோதல் காரணமாக அவர் சந்தித்த சில பிரச்னையை இரண்டு வீடியோக்களாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று பிரச்னைக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், மற்றுமொன்று பிரச்னைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

இதில் முதல் வீடியோவில், "புத்தம் புதிய டியூக்390 பைக் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, முதல் முறையாக கல்மீது மோதியுள்ளது. சமமாக உள்ள அந்த சாலையில் கல் எவ்வாறு மோதியது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால், அதனால் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிறு ஓட்டை ராகவை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், எஞ்ஜினில் இருந்து ஆயில் சிறிது சிறிதாக வெளியேற ஆரம்பித்துள்ளது.

சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

ஆனால், இதுகுறித்த காட்சிகள் அந்த வீடியோவில் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோன்று, ஆயில் வழிந்துபோகும் காட்சிகளும் இடம்பெறவில்லை. ஆனால், எஞ்ஜின் பகுதியில் திடீரென ஏற்பட்ட மோதல் காரணமாக ஆயில் வெளியேறுவது தெரியவருகிறது. இதனால், கேடிஎம் மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு சென்ற ராகவ், தனது பழுதடைந்த பைக் விட்டுவிட்டு வேறொரு பைக்கை எடுத்துசெல்ல ஆரம்பிக்கிறார்.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது வீடியோவில் அவர் பைக்கின் சர்வீஸ் மற்றும் அதற்கு செலவான பில் உள்ளிட்டவைப் பற்றிய காட்சியை வெளியிட்டுள்ளார். அதில், பைக்கை சரி செய்ய 18 ஆயிரத்து 700 ரூபாய் செலவாகி இருப்பது தெரியவருகிறது. இதில், மெக்கானிக் லேபர் சார்ஜ் மட்டுமே 4 ஆயிரத்து 720 ரூபாயாக உள்ளது. சிறிய கல் மோதியதன் காரணமாக அந்த பைக்கின் எஞ்ஜின் கவர், ஆயில் பில்டர் கேப், ஆயில் பில்டர், ஓ-ரிங்க்ஸ், பிஸ்டன், கிளட்ச் பிளேட் மற்றும் எஞ்ஜின் ஆயில் இவையனைத்தும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

ஆனால், ஓர் கல் பட்டதற்கு இவ்வளவு செலவா என நினைத்தால் நமக்கே தலை சுற்ற ஆரம்பித்துவிடுகிறது. சாலையில் மற்ற வேகனங்கள் வேகமாகச் செல்வதன் காரணத்தால் பறந்து வரும் கற்கள் சிலரின் உயிரைக் கூட பறிக்கும் அளவிற்கு அபாயமாக இருக்கிறது. ஆகையால், வாகனத்திற்கும், அதனை ஓட்டும் நாமும் உரிய பாதுகாப்பு கவசத்துடன் சாலையில் சென்றால் இதுபோன்ற வீண் செலவு மற்றும் ஆபத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

Source: Raghav Vlogs

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Happens When KTM Duke 390’s Engine Hits A Stone Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X