இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

இந்தியாவின் வாகன சந்தை இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வரும்நிலையில், யமஹா நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

நடப்பு 2019ம் ஆண்டு இந்திய வாகனத்துறைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி நிறைந்த காலமாக இருந்து வருகின்றது. இருப்பினும், பல நிறுவனங்கள் விடாப்பிடியாக இழந்த சந்தையை மீண்டும் பிடிக்கும் வகையிலான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

அந்தவகையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யமஹா, அதன் வாகனங்களை பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியிற்கு ஏற்பவாறு ட்யூன் அப் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

மேலும், இந்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவிற்குள் பிஎஸ்-6 தரத்திலான பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட யமஹா நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகின்றது. வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

இதுகுறித்த தகவலை யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பிஎஸ்-6 தரத்திலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் நடப்பாண்டின் நவம்பர் மாதத்திற்குபின் பல கட்டங்களாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

அதில், ஸ்கூட்டர்கள் மட்டும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என்ற தகவலையும் அது வெளியிட்டுள்ளது. யமஹாவின் இந்த அறிவிப்பு, அதன் ரசிகர்கள் பிஎஸ்-6 தரத்திலான வாகனங்களை வாங்குவதற்கு உதவும் வகையில் வெளியிட்டுள்ளது. மேலும், இதற்காக எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் வெளியிட்டுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தப்படுவதால், யமஹா பைக்குகளின் விலை கணிசமாக உயர இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் பைக்குகளைக் காட்டிலும் அவை, 10 முதல் 15 சதவீத விலையுர்வைப் பெற உள்ளன.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

யமஹா நிறுவனம், அதன் மோட்டார்சைக்கிள் வரிசையில், ஆர்3, எம்டி15, ஆர்15, பேஸர்25, எஃப்இசட்25, எஃப்இசட்எஸ் எஃப்ஐ, எஃப்இசட் எஃப்ஐ, எஸ்இசட் ஆர்ஆர் வி2, சல்யூடோ 125 மற்றும் சல்யூட்டோ ஆர்எக்ஸ் உள்ளிட்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

அதேபோன்று, ஸ்கூட்டர் வரிசையில் ரே இசட்ஆர், பஸ்ஸினோ மற்றும் ஆல்ஃபா உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும் அந்நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

யமஹா நிறுவனம், அதன் சில குறிப்பிட்ட இருசக்கர வாகனங்களை மட்டும் ஆஃப்செட் செய்ய உள்ளது. இதனடிப்படையிலேயே, 2018-ல் இருந்து இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளை பிரிமியம் தரத்தில் உயர்த்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

இந்தியாவில் செயல்பட்டுவரும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கேற்ப உற்பத்தி செய்துவரும்நிலையில், அதற்கான தரம் வாய்ந்த எரிபொருள் கிடைக்குமா... என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களும், அரசும் நாடு முழுவதும் அதே தரத்திலான ப்யூவல் கிடைப்பதை உறுதிச் செய்ய வேண்டும். ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் இதுவரை உறுதித்தன்மையுடன் வெளியிடப்படவில்லை.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

அதேசமயம், நாட்டின் சில மாநிலங்களில் மட்டும் மிக மிக குறைவான எண்ணிக்கையில், பிஎஸ்6 தரத்திலான எரிபொருளை விநியோகம் செய்யும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒன்றாவது செயல்படுகிறாதா... என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆனால், பிஎஸ்6 தரத்திலான வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவது மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... வேதனையில் ரசிகர்கள்!!!

முன்னதாக நாம் கூறியதைப்போன்று, இந்திய வாகனத்துறையின் வீழ்ச்சியில் எந்தவொரு நிறுவனமும் தப்பிக்கவில்லை. அதில், யமஹா நிறுவனமும் அடங்கும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் நடப்பு கால் நிதியாண்டில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்தவகையில், 15.11 சதவீத வீழ்ச்சியை யமஹா சந்தித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Confirms Price Hike On BS6 Vehicles. Read In Tamil.
Story first published: Friday, August 16, 2019, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X