எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

யமஹா நிறுவனம், எதிர்கால வாகன சந்தைக்காக புதிய கூட்டணியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

எலெக்ட்ரிக் வாகனங்களின் தற்போதைய சூழ்நிலை மிக மோசமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளையும் மின் வாகனங்கள் மட்டுமே ஆளும் என்பது தற்போதே உறுதியாகியுள்ளது.

இதனை நிரூபனம் செய்கின்ற வகையிலான செயல்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

அந்தவகையில், நாட்டில் தற்போது உபயோகத்தில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக, நாட்டில் இயங்கிவரும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் புதிய தயாரிப்புகளை மின் வாகனமாக தயாரிப்பதில் முனைப்பைக் காட்டி வருகின்றன.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

இந்நிலையில், ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிவரும் யமஹா, புதிய எலெக்ட்ரிக் ரக ஸ்கூட்டர் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ரக ஸ்கூட்டருக்காக, தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கும் கோகோரோ என்ற நிறுவனத்துடன் யமஹா இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

கோகோரோ நிறுவனம், ஏற்கனவே எலெக்ட்ரிக் ரக வாகனங்களை தயாரித்து தாய்வானில் விற்பனைச் செய்து வருகின்றது. இத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற பொருட்களையும் அந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.

கடந்த 2011ம் ஆண்டிற்கு பின்னர்தான் கோகோரோ நிறுவனம் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ஆனால், இதுவரை 1,50,000 ஆயிரம் யூனிட்டுகளை அது விற்பனைச் செய்துள்ளது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள், குறைந்த செலவில் அதிக பயனளிப்பவையாக இருக்கின்றன. அதேசமயம், நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவான பேட்டரி பேக்-அப் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றிருக்கின்றன. இதன்காரணமாகவே, கோகோரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அந்நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

மேலும், கோகோரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஸ்வாப்பிங் (பேட்டரியை கழட்டி மாட்டிக் கொள்ளும் திறன்) தொழில்நுட்பத்திலான பேட்டரியை பயன்படுத்துகின்றது. ஆகையால், பேட்டரி தீர்ந்துவிட்டால், அதனை காத்திருந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, முழுமையாக சார்ஜை இழந்த பேட்டரியை சார்ஜிங் மையங்களில் ஒப்படைத்துவிட்டு, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக்கொள்ளலாம்.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

இந்நிலையில், யமஹா மற்றும் கோகோரோ நிறுவனத்தின் கூட்டணி இணைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, இசி-05 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்ய இருக்கின்றன. இந்த ஸ்கூட்டருக்கான செயல்பாட்டு மாதிரியை யமஹா நிறுவனமும், செயல்பாட்டு கருவிகளை கோகோரோ நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

இந்த நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இசி-05 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஜூன் மாதத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

எரிபொருள் வாகனங்களின் விலையுயர்வு மற்றும் எரிபொருளின் விலையுயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வாகனங்களின் விற்பனை அண்மைக் காலங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

ஆகையால், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனத்தின் மூலம் விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக யமஹா இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.

அதேசமயம், வரும் காலங்களில் எரிபொருள் வாகனங்களுக்கான சேவை, பராமரிப்பு மற்றும் உதரிபாகங்களின் விலை பன் மடங்கு உயரவிருப்பதாக இப்போதே சில தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

எனவே, எதிர் காலத்தில் மின் வாகனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. ஆகையால், தற்போதே பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் பார்வையை மின் வாகனச் சந்தை பக்கம் திருப்பியுள்ளனர்.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

மேலும், வருகின்ற 2024ம் ஆண்டிற்குள் மின் வாகனங்களின் எண்ணிக்கை 4.5 பில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மிகப்பெரிய தூண்டல் ஆசிய சந்தைகளில் இருந்தே கிடைக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பெரும்பாலான நிறுவனங்கள் ஆசிய கண்டங்களைக் குறிவைத்தே அதன் தயாரிப்புகளை உற்பத்திச் செய்து வருகின்றது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

அந்தவகையில், கோகோரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாய்வானில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆகையால், யமஹா மற்றும் கோகோரோ நிறுவனத்தின் இணைப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராகிய யமஹா... புதிய கூட்டணியில் இணைப்பு!

தற்போது, இந்த இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்குறித்த தகவல் எதுவும் முழுமையாக வெளியாகவில்லை. அவை கூடிய விரைவிலேயே வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha EC05 Electric Scooter Will Soon Make Its Debut. Read In Tamil.
Story first published: Saturday, August 17, 2019, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X