யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

ஜப்பான் நாட்டை சேர்ந்த யமஹா நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் தற்போது யமஹாவின் பிரபல மாடல் பைக்குகளான எஃப்இசட் 25 மற்றும் ஃபாஜர் 25 பைக்குகளில் பிரச்சனை ஒன்று எழுந்துள்ளதை அடுத்து இந்த பைக்குகளை திரும்ப பெற்று சீர் செய்து தரும் பணியில் இந்நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

அதாவது வாடிக்கையாளர் ஒருவரின் பைக்கில் என்ஜின் கவரில் உள்ள போல்ட் ஒன்று வலுவாக பொருத்தப்படாததால் நழுவி வெளியே வந்துள்ளது. இந்த பிரச்சனைக்காக அவர் டீலர்ஷிப்பை நாட யமஹா நிறுவனம் இதனை முக்கிய விஷயமாக கருத்தில் எடுத்து கொண்டு இதுவரை விற்பனை செய்யப்ப்பட்ட 12,620 எஃப்இசட் 25 மற்றும் 728 ஃபாஜர் 25 பைக்குகளை டீலர்ஷிப்கள் மூலம் திரும்ப பெற்று சரி செய்து தர உள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

மேலும், இந்த சர்வீஸ்கள் இலவசமாக டீலர்ஷிப்கள் மூலம் செய்து தரப்படும் எனவும் யமஹா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இந்திய யமஹா மோட்டார் ப்ரைவேட் லிமிடேட் நிறுவனம் மிக அதிக தரத்துடன் பாதுகாப்பான தயாரிப்புகளை வெளியிட முனைப்புடன் உள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

யமஹா நிறுவனத்தின் இந்த எஃப்இசட் 25 மற்றும் ஃபாஜர் 25 பைக்குகளை திரும்ப அழைக்கும் செயல், ஏற்பட்டுள்ள பிரச்சனையை விரைவாக சரி செய்வதற்கான முன்னெச்சரிக்கையே. என்ஜின் ஹெட் கவர் போல்ட் லூஸிங் பெயரால் 2018 ஜூனில் தயாரிக்கப்பட்ட 13,348 மோட்டார்சைக்கிள்கள் (12,620 யூனிட் எஃப்இசட் 25 மற்றும் 728 ஃபாஜர் 25) திரும்ப அழைக்கப்படுகின்றன.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

பாதிப்பிற்குள்ளாகி உள்ள இந்த மோட்டார்சைக்கிள்களை யமஹா டீலர்கள் இலவசமாக சரி செய்து தரவுள்ளனர். எனவே இந்த இரு மாடல் மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்கள் தனித்தனியாக யமஹா டீலர்களை தொடர்பு கொள்ளலாம். யமஹா நிறுவனம் டீலர் பார்ட்னர்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் உள்ளது. மிக சிறந்த அனுபவம் வாய்ந்த முறையில் இந்த பிரச்சனையை சரி செய்ய உள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

இந்த போல்ட் வலுவாக பொருத்தப்படாதது தொடர்பான பிரச்சனைக்காக விற்பனையான இந்த இரு மாடல்களின் மோட்டார்சைக்கிள் அனைத்தையும் திரும்ப பெறும் யமஹா நிறுவனம், என்ஜினின் ஹெட் கவரில் பொருத்தியுள்ள அனைத்து போல்ட்களையும் மாற்றியமைக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் என்ஜின் பகுதியில் உள்ள O-ரிங் அமைப்பும் மாற்றப்பட உள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

ஏனெனில் இது சிறிய பிரச்சனை அல்ல. இந்த போல்ட் பைக் இயக்கத்தில் இருக்கும்போது தளர்வடைந்து என்ஜினிற்குள்ளேயே விழுந்தால், இது என்ஜினில் மிக பெரிய பிரச்சனையை கூட உண்டாக்கக்கூடும். இதனால் தான் யமஹா நிறுவனம் இந்த பிரச்சனையில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் பைக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று சரி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை? திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...

இதனால் யமஹா எஃப்இசட் 25 மற்றும் ஃபாஜர் 25 பைக்குகளை வைத்திருப்போர் உடனடியாக அருகில் இருக்கும் யமஹா டீலர்களை தொடர்பு கொள்வது நன்று. இதனை சரி செய்யும் நேரமும் மிக குறைவே. இந்த பிரச்சனையை டீலர்கள் 10-20 நிமிடங்களில் சரிப்பார்த்துவிடுவர். மேலும் யமஹா நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்ட எஃப்இசட் பைக்குகளையும் சந்தையில் வெறும் 99,000க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Recalls 13,348 Units Of The FZ 25 And Fazer 25
Story first published: Thursday, November 14, 2019, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X