பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை யமஹா கையில் எடுத்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறது.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை இந்தியாவில் மெல்ல வலுப்பெற துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து பெரும்பாலான இருசக்கர வாகன நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

எனவே, சேத்தக் ஸ்கூட்டரின் மார்க்கெட்டை குறிவைத்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி, தனது வர்த்தகத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு யமஹா திட்டமிட்டுள்ளது. புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்குவதற்கு இது உகந்த சூழலாக இருக்கும் என்றும் யமஹா கருதுகிறது.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

கடந்த 2002ம் ஆண்டு பசோல் என்ற தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தாயகமான ஜப்பானில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தற்போது கைவசம் சிறந்த மாடல்களை வைத்துள்ளது.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

யமஹா நிறுவனம் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை தைவானில் விற்பனை செய்கிறது. கோகோரோ நிறுவனம் யமஹா எலெ்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் EC-05 என்ற 5வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தைவானில் அண்மையில் அறிமுகம் செய்தது.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் யமஹா அதிக நிபுணத்துவத்தை பெற்றிருக்கிறது. எனவே, இந்தியாவில் மிக விரைவாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு யமஹா கைவசம் உள்ளது. இந்தியாவிற்கு தக்கவாறு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு வர முடியும்.

பஜாஜுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... முண்டாசு கட்டி இறங்கிய யமஹா!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தாலும், பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை தொடர்ந்து உற்பத்தி செய்யவும், தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை யமஹா நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ET Auto

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Japanese two-wheeler giant Yamaha is in the middle of conducting a feasibility study for electric vehicles in the country. According to the Economic Times Auto, the company is planning to launch an electric two-wheeler in India.
Story first published: Saturday, December 21, 2019, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X