Just In
- 48 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆர்15 வி3 மாடலை கூடுதல் கவர்ச்சியாக உருவாக்கிய யமஹா: புகைப்படங்கள் உள்ளே!
யமஹா நிறுவனம் அதன் ஆர்15 வி3 மாடல் மோட்டார்சைக்கிளை மேலும் கவர்ச்சிப்படுத்தும் வகையில், மூன்று புதிய வண்ணக்கலவையில் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த முழுமையான இந்த பதிவில் காணலாம்.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், ஆர்15 வி3 என்ற என்ட்ரீ லெவல் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கை இந்தியாவில் கடந்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் மிடுக்கான ஸ்டைலில் மயங்கிய இளைஞர்கள் இதற்கான சந்தையை பரந்து விரிந்த அளவில் ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் யமஹா ஆர்15 வி3 ஒன்பதாயிரம் யூனிட்களை விற்றன.

இதைத்தொடர்ந்து, யமஹா நிறுவனம் கடந்த வருடம் ஆர்15 வி3 மாடலில் மேட் பிளாக் ஃபினிஸிங்கில், டார்க் நைட் எடிசன் என்ற புதிய வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதன் விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 1.43 லட்சம் என்று விற்பனைக்கு வந்தது.

இதேபோன்று, ஆர்15 வி3 மாடலானது தண்டர் கிரே, ரேஸிங் ப்ளூ ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவற்றின் மதிப்பு எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 1.39 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யமஹா நிறுவனம் ஆர்15 வி3 மோட்டார்சைக்கிளின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, அந்த மாடலை மேலும் கூடுதலாக மூன்று வண்ண கலவைகளில் உருவாக்கியுள்ளது. இதனை சர்வதேச சந்தையான, இந்தோனேசியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், கிரே நிறத்துடன் கூடிய ரேஸிங் ப்ளூ, கிரே நிறுத்துடன் கூடிய மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்துடன் கூடிய கருப்பு ஆகிய மூன்று வண்ணக் கலவையில் புதிய வெர்ஷன் ஆர்15 வி3 மாடல்களை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை இந்தோனேசியாவின் ஐடிஆர் மதிப்பில் 3,576,00000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.76 லட்சமாகும்.

இந்த வண்ணக் கலவையைக் கொண்ட ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள்கள் இதுவரை அதிகாரப்பூர்பவமாக இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் சில டீலர்கள், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, அவர்களே மாடிஃபை செய்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பெங்களூருவில் இருக்கும் யமஹா மோட்டார்ஸின் டீலர் ஒருவர் கருப்பு மற்றும் மஞ்சள் வேரியண்டை விற்பனைச் செய்து வருகிறார். இந்த மோட்டார்சைக்கிளில் அவர் பிரத்யேகமாக கிராஃபிக் ஸ்டிக்கர்களையும் ஒட்டி வழங்குகிறார்.
READ MORE: வெறும் ரூ. 80 செலவில் காரின் பின்பக்கத்தில் ஏசி அமைப்பது எப்படி...? -வீடியோ!

யமஹாவின் இந்த ஆர்15 வி3 மாடல் மோட்டார்சைக்கிளில் 155சிசி கொண்ட லிக்யூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 19 பிஎச்பி பவரை 10,000 ஆர்பிஎம்-லும், 15 என்எம் டார்க்கை 8,500 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் கூடுதல் வசதியாக 282mm டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 220mm டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், பாதுகாப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது.