புத்தம் புது ஸ்டைலுடன் விற்பனைக்கு வருகிறது யமஹா ஃபஸினோ!

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்திய சந்தையில் இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் அனைத்து வயதினர்களுக்கும் ஏற்ப வாகனங்களைத் தயாரித்து வருகிறது.

அந்த வகையில், இளைஞர்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்ட யமஹாவின் R15, FZ ஆகிய பைக்குகள் மிகவும் பிரபலமானவை. இதைத்தொடர்ந்து, யமஹா ஃபஸினோ, சிக்னஸ் ரே ஆகிய ஸ்கூட்டர்களும் இருசக்கர வாகன விற்பனையில் பெரிய அளவில் இடம் பிடித்தன.

யமஹா ஃபஸினோ

இந்நிலையில், யமஹா நிறுவனம் தனது வாகனங்களின் வரிசைப்படுத்தப்பட்ட விலையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, பைக்குகளின் புதிய விலை 52 ஆயிரத்து 272 ரூபாயில் இருந்து தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், புதிதாக விற்பனையாக இருக்கும் வாகனங்களில், யுபிஎஸ் (UBS) என்னும் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை கூடுதலாக இணைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிக்கு வாழ்நாள் இலவச சர்வீஸையும் யமஹா அறிவித்துள்ளது.

யமஹா ஃபஸினோ

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மோடோஃபுமி சிதாரா கூறியதாவது, கடந்த ஐந்து வருடங்களாக யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், புத்தம் புதிய ஸ்டைலான ஸ்போர்ட் ரக பைக்குகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தில் ஃபஸினோ ஸ்கூட்டரும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, புத்தம் புது தோற்றத்துடன், கூடுதல் வசதியுடன் வாகனங்கள் விற்பனையாக உள்ளன.

இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டில், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டைலிஸான பைக்குகளை ஏபிஎஸ் வசதியுடன் விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, Fazer 25 (249 cc), FZ 25 (249 cc), FZS F1 (149cc), புத்தம் புதிய FZ FI (149 cc) மற்றும் YZF-R15 வெர்ஷன் 3.0 (155 cc) ஆகிய மாடல் பைக்குகள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launches All New Fascino Scooter In This Year. Read In Tamil.
Story first published: Tuesday, February 5, 2019, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X