யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

அறிமுகம் செய்யப்பட்டு அரையாண்டு காலத்தில் யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை சிறப்பாக அமைந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், கேடிஎம் ஆர்சி125 பைக்கின் கடும் நெருக்கடியை யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

கடந்த மார்ச் மாதம் யமஹா எம்டி15 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே, இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஆர்15 பைக்கின் நேக்கட் ஸ்டைல் மாடல் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை தக்க வைக்கும் விதத்தில், முதல் மாதத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்தது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

புதிய யமஹா எம்டி 15 பைக்கில் இருக்கும் 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19.1 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்தது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

கடந்த மார்ச் மாதத்தில் 5,203 யமஹா எம்டி 15 பைக்குகள் விற்பனையாகின. இதனால், யமஹா எம்டி15 பைக்கின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆனால், முதல் மாதம் கிடைத்த வரவேற்பை அந்த பைக் தொடர்ந்து தக்க வைக்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

இந்த காலக்கட்டத்தில் 15,298 யமஹா எம்டி 15 பைக்குகளும், 15,087 கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி125 பைக்குகளும் விற்பனையாகி இருக்கின்றன. சிசி திறன் வேறுபட்டாலும், விலை அடிப்படையில் இரு மாடல்களும் மோதிக் கொள்கின்றன.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

ஆனால், இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஏனெனில், கடந்த சில மாதங்களாக கேடிஎம் 125 சிசி பைக்குகளின் விற்பனை யமஹா எம்டி 15 பைக்கின் விற்பனையை விட அதிகம் இருக்கிறது. எனவே, வரும் மாதங்களில் சராசரியான விற்பனை அளவை மட்டும் யமஹா எம்டி15 பைக் பதிவு செய்யும் வாய்ப்புள்ளது.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

ஆனால், யமஹா ஆர்15 பைக்கிற்கான வரவேற்பு தொடர்ந்து சிறப்பாக இருந்து வருவது அந்நிறுவனத்திற்கு ஆறுதலை தரும் விஷயமாக கூறலாம். கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், 36,167 யமஹா ஆர்15 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 6,000 யமஹா ஆர்15 பைக்குகள் விற்பனையாகின்றன.

யமஹா எம்டி15 பைக்கின் விற்பனையில் 'ஸ்ருதி' இறங்குகிறது!

நேக்கட் ரகத்திலான யமஹா எம்டி 15 மற்றும் கேடிஎம் 125 ட்யூக் பைக்குகள் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், அதைவிட ஸ்போர்ட்ஸ் ரகத்தில் விற்பனையாகும் யமஹா ஆர்15 பைக்கிற்குதான் ரசிகர்கள் தொடர்ந்து அதிக ஆதரவை அளித்து வருவது இந்த விற்பனை மூலமாக தெரிய வருகிறது. தோற்றம், செயல்திறன், விலை என அனைத்திலும் யமஹா ஆர்15 இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha MT-15 sales in India has achieved a new milestone crossing 15,000 units within the first six months of its launch. The Yamaha MT-15 went on sale in the Indian market in March earlier this year. Since its launch, the company has registered 15,298 units of sales in India.
Story first published: Monday, September 23, 2019, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X