கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த யமஹா எம்டி-15 (Yamaha MT-15) மோட்டார் சைக்கிள், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. என்றாலும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளின் விலை கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

ஏனெனில் யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளுக்கு ரூ.1.36 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் 150-160 சிசி செக்மெண்ட்டில் விற்பனை செய்யப்படும் எஞ்சிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Streetfighter) மாடல் மோட்டார் சைக்கிள்களை காட்டிலும், யமஹா எம்டி-15 பைக்கின் விலை மிகவும் அதிகம்.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

போதாக்குறைக்கு யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் கூட ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

யமஹா எம்டி-15 பைக்கின் விலையை காட்டிலும் கூடுதலாக 3,680 ரூபாய் செலவிட்டால், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய யமஹா ஆர்15 வி3 (Yamaha R15 V3) மோட்டார் சைக்கிளையே வாங்கி விட முடியும். யமஹா ஆர்15 வி3 மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 1,39,680 ரூபாய் மட்டுமே. இதுபோன்ற காரணங்களால் யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள், சமூக வலை தளங்களின் வாயிலாக யமஹா நிறுவனத்திற்கு தங்கள் எதிர்ப்பை காட்டினர். இது 'MT-15' அல்ல, 'Empty 15' எனவும் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக எம்டி-15 மோட்டார் சைக்கிளின் விற்பனை யமஹா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என கணிக்கப்பட்டது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

ஆனால் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி முதல் மாதத்திலேயே அட்டகாசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கெத்து காட்டியுள்ளது யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள். கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள்களின் விற்பனை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

இதன்படி கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 5,203 யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பான தொடக்கத்தை யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது. இத்தனைக்கும் மார்ச் மாத மத்தியில்தான் யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

அதிகப்படியான விலை, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமே வழங்கப்படுகிறது என்ற குறைகளை எல்லாம் கடந்து யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளை இந்திய ரசிகர்கள் ஏற்று கொண்டு விட்டனர் என்பதையே இது காட்டுகிறது. இத்தனைக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளில், 155 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 19.3 எச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் 282 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது

இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 155 மிமீ. எடை 138 கிலோ கிராம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. யமஹா எம்டி-15 மோட்டார் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு தோராயமாக 130 கிலோ மீட்டர்கள். இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டருக்கு தோராயமாக 40 முதல் 45 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha MT-15 Sales Report For March 2019. Read in Tamil
Story first published: Friday, April 19, 2019, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X