இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து: பைக்கை தெறிக்கவிடும் சிறப்பம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர்!!!

யமஹா நிறுவனத்தின் அதிக திறன் வாய்ந்த ஸ்கூட்டராக உருவாகியிருக்கும் என்மேக்ஸ் அடுத்த வருடம் இந்தியாவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் திறன்கள், பல பைக்குகளுக்கே போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா மோட்டார், இந்தியாவில் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்நிறுவனம் அப்ரில்லா மற்றும் வெஸ்பா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை யமஹா நிறுவனம் தரப்பிலிருந்து, எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஸ்கூட்டர் எந்தவகையில், அப்ரில்லா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களக்கு போட்டியாக இருக்குமென்றுதானே கேட்கிறீர்கள்... அதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் காண போகின்றோம்.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

என்மேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் 155சிசி திறனைக் கொண்ட பிரிமியம் ரகத்தில் களமிறங்க இருக்கின்றது. இந்த சிசி திறனானது, தற்போது இந்தியாவில் விற்பனையில் சில முன்னணி பைக்குகளுக்கே போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. இதன்காரணமாகவே, தற்போது சிசி திறன் அதிகம் கொண்ட ஸ்கூட்டர்களாக விற்பனையில் இருக்கும், மற்ற போட்டி நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கு இது டஃப் கொடுக்கும் என கருதப்படுகின்றது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

யமஹா நிறுவனம், இந்தியாவில் இதுவரை 125 சிசி திறனிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், அண்மைக் காலமாக இந்திய இருசக்கர வாகன ஸ்கூட்டர் சந்தையில், அதிகமான வரவேற்பை 125 ரகத்திலான ஸ்கூட்டர்களே பெற்று வருகின்றன.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால், இந்த 125 சிசி ஸ்கூட்டர் சந்தையை தவிர்த்த யமஹா நிறுவனம், நேரடியாக 155 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்கி, புதிய பாதையை நிறுவ அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்தவகையில்தான், புதிய ஸ்போர்டி தரத்திலான என்மேக்ஸ் 155 மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அந்நிறுவனம் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

இது, தற்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி பர்க்மேன், அப்ரில்லா மற்றும் வெஸ்பா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிக சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அறிமுகமாக இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், அந்த ஸ்கூட்டரில் 155.1 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிகள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்ட உள்ளது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

அது, அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில், 14.8 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 14.4 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த என்மேக்ஸ் ஸ்கூட்டருக்கு விவிஏ எனப்படும் வேரியபிள் வால்வ் ஆக்டுவேஷன் திறன் வழங்கப்பட்டுள்ளது. இது, உயர்ந்த மற்றும் அதிக வேகத்தின்போது எஞ்ஜின் திறனை சீராக வெளிப்படுத்தும் உதவும்.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

அதேசமயம், இந்த எஞ்ஜினை யமஹா நிறுவனம், இந்தியச் சந்தைக்கு ஏற்பவாறு ட்யூன்-அப் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையை, இந்தியர்களின் மைலேஜ் எதிர்பார்ப்பிற்காக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

மேலும், சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருடன் போட்டியிடும் வகையில், யமஹா என்மேக்ஸ் ஸ்கூட்டரில், பல்வேறு சிறப்பான பிரிமியம் ரகத்திலான அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அந்தவகையில், ஸ்கூட்டரின் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி ரகத்தில் காட்சியளிக்க இருக்கின்றது. அதேபோன்று, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பெரியளவிலான வின்ட்ஸ்கிரீன் உள்ளிட்ட வசதிகளும் இடம் இடம்பெற இருக்கின்றது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

இத்துடன், வாகன ஓட்டியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான ஸ்டோரேஜ் வசதியும் இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே இடம் பெற இருக்கின்றது. மேலும், ஸ்கூட்டரின் உறுதியான மற்றும் இலகுவான கட்டுமானத்திற்கு டியூபுளர் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, ஸ்போர்ட்டியான மற்றும் ஸ்டேபிள் ஹேண்டிலை வழங்கும்.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

அதேபோன்று, ஸ்கூட்டரின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக, அதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் டவின் ஷாக் அப்பசார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக இரு முனைகளுக்கும் 230 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பு வசதியாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் இதில் இடம்பெற இருக்கின்றது.

இந்தியர்களுக்கான யமஹாவின் விருந்து... பைக்கை தெறிக்கவிடும் சிறப்பசம்சத்துடன் களமிறங்கும் புதிய ஸ்கூட்டர்!!!

இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, களமிறங்கும்போது, ரூ. 1 லட்சம் என்ற இந்திய விலையில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என கூறப்படுகின்றது. மேலும், இதுகுறித்த தகவலை, யமஹா நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிரப்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha NMAX 155 Scooter Launch In India 2020. Read In Tamil.
Story first published: Monday, July 22, 2019, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X