வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் புகழ்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் யமஹா, வழக்கத்திற்கு மாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால், அதன் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொதுவாக இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து நிறுவனங்களும் ஆடி மாதம் தொடங்கவிருக்கிறது என்றாலே, 'ஆடி தள்ளுபடி' என்ற பெயரில் பல்வேறு சலுகைகளையும், சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்குவது வழக்கம். ஆனால், இதற்கு விதி விலக்காக ஜப்பான் நாட்டு நிறுவனமான யமஹா வழக்கத்திற்கு மாறான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்தவகையில், அதன் பிரபல மாடல்களான ஆர்15 மற்றும் எஃப்இசட் வரிசையில் உள்ள பைக்குகளின் விலையை உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால், ரூ. 600 முதல் 1,200 ரூபாய் வரையிலான விலை உயர்வை அந்த பைக்குகள் பெற்றுள்ளன. மேலும், இதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் ஆங்கில இணையதளம், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யமஹா ஆர்15வி3 மாடல் புதிய விலையை அறிவிப்பை அடுத்து ரூ. 1,40,280 என்ற விலையில் விற்பனைக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த பைக் ஒரு லட்த்து 39 ஆயிரத்து 680 ரூபாய் என்ற விலையில் இருந்து குறிப்பிடத்தகுந்தது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதேபோன்று, யமஹா ஆர்15வி3 மாடலில் கிடைக்கும் டார்க்நைட் எடிசனும் விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், முந்தைய விலையான ரூ. 1,41,680 என்பதை மாற்றி ரூ. 1,42,280 என்ற விலையைப் பெற்றுள்ளது. அதேபோன்று, யமஹா எஃப்இசட்25 மாடலும் ரூ 1,34,180 என்ற புதிய விலையைப் பெற்றிருக்கின்றது. இதற்கு முன்பு இந்த பைக் ரூ.1.33 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதேபோன்று, எஃப்இசட் வரிசையில் விற்பனையில் இருக்கும் மற்ற மாடல் பைக்குகளும் விலை உயர்வைப் பெற்றிருக்கின்றன. அந்தவகயைில், பேஸர்-25 ஸ்போர்ட் டூரர் பைக் ரூ. 1.43 லட்சத்திலிருந்து ரூ. 1,44,180 என்ற விலையையும், எஃப்இசட்-எஃப்ஐ மாடல் பைக் ரூ. 96,180-லிருந்து ரூ. 98,180 என்ற விலையையும், எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக் ரூ. 95 ஆயிரத்திலிருந்து 97 ஆயிரம் ரூபாய் வரையும் விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்போது விலையுயர்வைப் பெற்றிருக்கும் மாடல்களிலேயே யமஹா ஒய்இசட்எஃப்ஆர்15 வி3.0 மாடல் பைக்தான் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருக்கின்றது. அதேசமயம், இது இந்த அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை பைக்காகும். அவ்வாறு, மூன்றாம் தலைமுறை பைக்காக வெளிவந்த ஒய்இசட்எஃப்ஆர்15 வி3.0 பைக்கை பிரிமியம் லுக்கில் காட்சிப்படுத்தும் வகையில், அதன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை காட்சி வழங்கின.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதேசமயம், இந்த பைக்கின் எஞ்ஜினும் கணிசமான அப்டேட்டைப் பெற்றிருந்தது. அவ்வாறு, பைக்கில் 155சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 19.3 பிஎஸ் பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதையடுத்து உள்ள எஃப்இசட்25 மற்றும் பேஸர் 25 ஆகிய இரு பைக்குகளும் 249 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் எஞ்ஜினைத் தான் பெற்றிருக்கின்றன. இந்த எஸ்ஓஎச்சி எஞ்ஜின் 20.9 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 20 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதைத்தொடர்ந்து, மலிவு ரக பைக்குகளாக இருக்கும் எஃப்இசட்-எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக்குகள் 149சிசி திறன் கொண்டி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஸ்ஓஎச்சி எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றன. இது, 13.2 பிஎஸ் பவரையும், 12.8 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவைகளாகும்.

வழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட மாடல்களின் விலையை அதிரடியாக நிறுவனம், முன்னதாக ஒய்இசட்எஃப்-ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய இரு மாடல்களை விற்பனையில் இருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்த பைக்குகளில் ஆன்டி லாக் பிரேக்கிங் வசதியை இணைக்கும் விதமாக தற்காலிக விலகல் அறிவிப்பை யமஹா நிறுவனம் வெளியிட்டிருந்தது.

Images are representation purpose only

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Price Hike. Read In Tamil.
Story first published: Tuesday, July 9, 2019, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X