வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா நிறுவனத்திற்கு பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஃபுல்லி ஃபேர்டு பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் ஒன்று யமஹா ஆர்15 (Yamaha R15). கடந்த பிப்ரவரி மாதத்தில், யமஹா நிறுவனம் மொத்தம் 8,939 யூனிட் ஆர்15 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில், அதாவது 2018 பிப்ரவரி மாதத்தில் வெறும் 3,438 ஆர்15 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

இதன் மூலம் யமஹா ஆர்15 பைக்கானது 160 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதே 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், கடந்த பிப்ரவரி மாதத்தில் யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனை 2,000 யூனிட்களுக்கும் மேல் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்15 பைக்கின் ஏபிஎஸ் வெர்ஷனை யமஹா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

நடப்பு மாத இறுதியுடன் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படவுள்ள ஏபிஎஸ் அல்லாத மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சுமார் 12 ஆயிரம் ரூபாய் அதிகம். இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்துள்ளது. ஆனால் யமஹா நிறுவனம் சிங்கிள் சேனல் யூனிட்டை மட்டுமே வழங்கும் என வதந்திகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

ஆனால் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆர்15 பைக்கின் நேக்கட் வெர்ஷனான யமஹா எம்டி-15 (Yamaha MT-15) பைக்கானது, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் மட்டுமே வந்துள்ளது. எனினும் இதன் விலை ஃபுல்லி ஃபேர்டு உடன்பிறப்பான ஆர்15க்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைந்து அட்ஜஸபிள் ப்ளூயிட் பிரஷரையும் (Adjustable Fluid Pressure) யமஹா நிறுவனம் சேர்த்துள்ளது. வழுக்க கூடிய மேற்பரப்புகளில் பைக்கின் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸை இது அதிகரிக்கும். இதன் பெரும்பாலான போட்டி நிறுவன பைக்குகளில், இந்த வசதி கிடையாது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

அத்துடன் ஆர்15 பைக்கில், புதிய டார்க்நைட் கலர் ஆப்ஷனையும் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரெகுலர் கலர்களான ரேஸிங் ப்ளூ மற்றும் தண்டர் க்ரே ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சுமார் 2,000 ரூபாய் அதிகம். மூன்றாம் தலைமுறை ஆர்15 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது முதல், இந்த ஃபுல்லி ஃபேர்டு மோட்டார் சைக்கிளின் விற்பனை கணிசமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜிபி எடிசனையும் யமஹா நிறுவனம் ஏற்கனவே லான்ச் செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்15 வெர்ஷன் 3.0ன் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் அதன் டிசைனும் ஒன்று. இதன் முன்பகுதியில் ட்யூயல் எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருங்கிணைந்த ரியர் வியூ மிரர்களுடன் கூடிய பெரிய வைசரும் கொடுக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை பொய்யாக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய யமஹா... கிடைத்த பரிசு இதுதான்...

அதே சமயம் இதன் பின்பகுதி எல்இடி டெயில் லேம்ப் உடன் வருகிறது. ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கில் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 19.3 பிஎஸ் பவரையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15 V3.0 Sales Increased By 160 Per cent In February 2019. Read in Tamil
Story first published: Saturday, March 23, 2019, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X