அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா.. புகழ்வாய்ந்த இரு மாடல்கள் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்!

இந்திய இளைஞர்கள் மத்தியில் புகழ்வாய்ந்த பைக்குகளாக இருக்கும், யமஹா ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய இரு மாடல்களையும் யமஹா நிறுவனம் விற்பனையில் வெளியேற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மற்றும் இளைஞர்களுக்கு பிடித்தமான இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், யமஹா ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய இரு மாடல் பைக்குகள்தான் தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

இந்த நடவடிக்கையின் காரணமாக, யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் இருந்து, யமஹா பேஸர் பைக்கின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆர்15எஸ் மாடலின் தகவல்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. இருப்பினும் இது விரைவில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

இந்நிலையில், யமஹா டீலர்களும் இந்த இரு மாடல் பைக்குகளின் விற்பனை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமஹாவின் இந்த அதிரடி அறிவிப்பு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

ஆனால், இந்த நடவடிக்கை அனைத்தும் தற்காலிகமானது என பினான்சியல் எக்ஸ்பிரஷ் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த இரு மாடல்களும் சில அப்டேட்டுகளைப் பெற்று விரைவில் விற்பனை வரும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் யமஹா நிறுவனம், ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய இரு மாடல்களிலும் ஏபிஎஸ் என்ற ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்தை இணைக்க இருக்கின்றது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

மத்திய அரசின் அறிவிப்பின்படி, நாட்டில் விற்பனையாகும் வாகனங்கள் அனைத்திலும், குறைந்தபட்ச பாதுகாப்பு வசதியாக, வாகனத்தின் சிசி திறன் அடிப்படையில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் அல்லது ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏப்ரல் 1ம் தேதியே அறிமுகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

ஆனால், யமஹா நிறுவனம் இதனை ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்வதில் தவறிவிட்டது. இதன்காரணமாகவே, அவசர அவசரமாக இந்த இரு மாடல்களின் விற்பனையையும் நிறுத்திவைத்துவிட்டு, அவற்றை அப்டேட் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

யமஹா நிறுவனம் ஆர்15 எஸ் மாடலை, அதன் புகழ்வாய்ந்த ஆர்15 மாடலை தழுவி இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதேசமயம், இந்த பைக்கை ஆர்15 வி2.0 வெர்ஷனின் அம்சங்கள் சிலவற்றைப் பெற மாடலாக களமிறக்கப்பட்டது. அந்தவகையில், இதன் உடல் கட்டமைப்பு டெல்டா பாக்ஸ் ஃப்ரேமாமல் நிறுவப்பட்டுள்ளது. மேலும், ஸ்போர்ட் லுக்கை வழங்கும் வகையில் சிங்கிள் சீட் இருக்கை செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

இதேபோன்று, யமஹா பேஸர் 150 பைக்கும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மடால் பைக்காக இருக்கின்றது. இந்த மாடலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பைக்காக இருக்கின்றது. இதற்கு இந்த பைக்க நடுத்தரமான அழுகுடைய பைக்காக இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. பேஸர் 150 மாடலை யமஹா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த எஃப்இசட் மாடலை தழுவி உருவாக்கியுள்ளது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

ஆர்15எஸ் மற்றும் பேஸர் 150 ஆகிய இரு பைக்குகளிலும் ஒரே திறன் கொண்ட எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 149 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் இந்த இரு பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது பேஸர் 150 மாடலில் 16 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப்பைப் பெற்றுள்ளத. அதேசமயம், ஆர்15எஸ் மாடல் 13 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது. இந்த இரு பைக்கிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் காணப்படுகின்றது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

இந்த இரு பைக்குகளும் கடந்த காலங்களில் குறைவான விற்பனையையேப் பெற்று வருகின்றன. இதற்கு, இரு பைக்குகளிலும் பழைய தரத்திலான எஞ்ஜின், அப்டேட் செய்யப்படாத தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் காலாவதியான டிசைன் உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருந்து பின்வாங்கப்பட்டிருக்கும் இந்த இரு பைக்குகளிலும் கணிசமாக அப்டேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா... இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் விற்பனையில் பின்வாங்கப்பட்டதாக தகவல்...!

ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த இரு மாடல்களிலும், வாகன ஓட்டியின் பாதுகாப்பு வசதியான ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகமாவது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Discontinues Production Of R15S & Fazer 150 — Is There A Replacement On The Way? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X