புதிய எஞ்சின், அசத்தும் ஸ்டைல்... புதிய யமஹா ரே இசட்ஆர் 125 மாடல்கள் வெளியீடு!

சக்திவாய்ந்த புதிய எஞ்சினுடன் யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்ட்ரீட் ராலி ஆகிய இரண்டு மாடல்களும் இன்று இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் மாடல்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா ரே வரிசையில் இசட்ஆர் மற்றும் இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி ஆகிய மாடல்கள் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த ஸ்கூட்டர் மாடல்களின் ஸ்டைல் மற்றும் செயல்திறனை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது யமஹா நிறுவனம்.

புதிய யமஹா ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டர் மாடல்கள் வெளியீடு

Image Courtesy: aiymrc/Instagram

அதன்படி, வடிவமைப்பிலும், தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 113சிசி எஞ்சினுக்கு பதிலாக ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய புதிய 125 சிசி எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் வந்துள்ளது. லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் இருப்பது போன்றே, எஞ்சினை ஸ்டார்ட் செய்யும்போது சப்தம் இல்லாமல், அமைதியாக எஞ்சினை உயிர்ப்பிக்கும் புதிய தொழில்நுட்பமும் உள்ளது. பழைய மாடலைவிட இதன் எஞ்சின் 30 சதவீதம் கூடுதல் பவரை வழங்க வல்லது.

இந்த ஸ்கூட்டரில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

சைடு பேனல்களில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வசீகரமாக இருக்கின்றன. ஹேண்டில்பார் உயரம் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டுபவருக்கு 18 மிமீ வரை நெருக்கமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மேம்பட்ட ஓட்டுதல் உணர்வை வழங்கும்.

பழைய பிஎஸ்-4 இசட்ஆர் ஸ்கூட்டர்களைவிட புதிய பிஎஸ்-6 125சிசி ரே இசட்ஆர் வரிசை மாடல்கள் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா ஃபஸினோ 125 மாடலின் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு மாடல்களின் விலை அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Japanese two wheeler maker, Yamaha has unveiled the Ray ZR 125 and the Ray ZR 125 Street Rally scooters in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X