7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்

எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மோட்டார்சைக்கிள்களை திரும்ப அழைக்கவுள்ளதாக யமஹா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்குகளின் பின்புற பக்கவாட்டில் பிரதிப்பலிப்பான் சரியாக பொருத்தப்படாததால் திரும்ப அழைக்கப்படுவதாகவும் இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

2019 அக்டோபர் மாதத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகள் தான் இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள யமஹா நிறுவனம், இதனால் அந்த குறிப்பிட்ட மாதத்தில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட 7,757 யூனிட் பைக்குகளையும் திரும்ப அழைப்பதாக கூறியுள்ளது.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

தன்னிச்சையாக தானே முன்வந்து யமஹா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். திரும்ப அழைக்கப்படும் பைக்குகளில் இந்த பிரச்சனையை எந்தவொரு செலவும் இல்லாமல் யமஹா நிறுவனம் சரிசெய்யவுள்ளது.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

யமஹா எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்குகளின் உரிமையாளர்கள் நேரடியாக தங்களது பகுதிகளில் உள்ள யமஹா டீலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்நிறுவனம் எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகளை பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்து கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

இந்தியாவிலேயே பிஎஸ்6 தரத்தில் அறிமுகமான முதல் மோட்டார்சைக்கிள்களாக விளங்கும் இவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த பைக்குகளில் புதிதாக சில கூடுதல் நிற தேர்வுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது எஃப்இசட்-எஸ் பிஎஸ்6 பைக்கிற்கு டார்க்நைட் மற்றும் மெட்டாலிக் ரெட்டும், எஃப்இசட் பிஎஸ்6 பைக்கிற்கு மெட்டாலிக் கருப்பு மற்றும் ரேசிங் ப்ளூ நிறமும் கூடுதல் தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஏற்கனவே எஃப்இசட்-எஸ் பைக்கிற்கு டார்க் மேட் ப்ளூ, மேட் கருப்பு, க்ரே மற்றும் சியான் ப்ளூ உள்ளிட்ட நிற தேர்வுகள் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

இரு மோட்டார்சைக்கிள்களிலும் பிஎஸ்6-க்கு இணக்கமான ஒரே 149சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் 12 பிஎச்பி பவரையும் 5,500 ஆர்பிஎம்-ல் 13.6 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வெளிப்படுத்துகிறது. எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் எல்சிடி தொடுத்திரை போன்ற அம்சங்கள் இந்த புதிய பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளன.

7,700 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன... இதுதான் பிரச்சனையாம்..

ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மோட்டார்சைக்கிள்களாக யமஹாவின் இந்த எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் மாடல்கள் தான் விளங்குகின்றன. இந்த நிலையில் தற்போது இவற்றின் குறிப்பிட்ட கால தயாரிப்பு பைக்குகள் மட்டும் திரும்ப அழைக்கப்பட்டிருப்பது சிறிய அளவிலான பிரச்சனைக்காக தான். இதனால் இவை குறுகிய நேரத்திலேயே சரிசெய்யப்படும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZ & FZ-S Motorcycles Recalled In India: Over 7,700 Units Affected
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X