ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

யமஹா நிறுவனம், அதன் புத்தம் புதிய எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் யமஹா நிறுவனம், அதன் புத்தம் புதிய ரெட்ரோ லுக்கிலான எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கை தாய்லாந்தில் அறிமுகம் செய்தது.

எக்ஸ்எஸ்ஆர் வரிசையில் ஏற்கனவே எக்ஸ்எஸ்ஆர்700 மற்றும் எக்ஸ்எஸ்ஆர்900 ஆகிய இரண்டு மாடல் பைக்குகள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவில் இன்னும் களமிறக்கப்படவில்லை. வெளிநாடுகளில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

இந்நிலையில், இவ்வரிசையில் கூடுதலாக ஓர் புதிய மாடலை அறிமுகம் செய்யும் விதமாக, புதிய எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கை, இந்தியாவில் விற்பனையாகும் ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 மாடல்களின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

ஆகையால், இந்த பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலை கடைசியாக பார்க்கலாம். முதலில் புதிய எக்ஸ்எஸ்155 பைக்கின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் யமஹா நிறுவனத்தின் ஹெரிடேஜ் லுக்கைக் கொண்ட பைக்குகளின் வரிசையில் இணைந்துள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

மேலும், அந்த ஸ்டைலில் கிடைக்கும் மலிவு விலையிலான பைக்காகவும் இது பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், புதிய எக்ஸ்எஸ்ஆர்155 தாய்லாந்தில் 91,500 தாய் என்ற மதிப்பில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 2.12 லட்சம் ஆகும். இது ஆர்15 மற்றும் எம்டி15 ஆகியவற்றின் விலையைக் காட்டிலும் குறைவானதாகும்.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

அவை, தாய்லாந்தில் 98,500 தாய் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 2.29 லட்சம் ஆகும்.

இந்த விலை வித்தியாசங்கள் நமக்கு பல புரிதல்களை வழங்குகின்றன. அதாவது, விலைக் குறைப்பின் காரணமாக இந்திய மாடல்களில் யுஎஸ்டி ஃபோர்க் போன்ற பல்வேறு சில சிறப்பம்சங்கள் இடம்பெறுவதில்லை.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

ஆகையால், தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்எஸ்ஆர் பைக்குகள் யுஎஸ்டி ஃபோர்க் அம்சத்துடன் காட்சியளிக்கின்றன. இத்துடன், விரிவான ஸ்விங்கார்ம் மற்றும் விவிஏ திறன் கொண்ட 155சிசி எஞ்ஜின் அதில் காணப்படுகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

இது, 19.3 எச்பி பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜின் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் 6-ஸ்பீடு கியார்பாக்ஸில் இயங்கும். இதே திறன்தான் எம்டி15 பைக்கில் காணப்படுகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

பல அம்சங்கள் இந்த பைக்கில், யமஹாவின் மற்ற பைக்குகளில் பெறப்பட்டதாக இருந்தாலும், இதன் ஸ்டைல் மற்றும் தனித்துவமானதாக இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், பழமையான தோற்றம் கொண்ட பெட்ரோல் டேங்க், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் தட்டையான இருக்கை உள்ளிட்டவை உள்ளன.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

அதேசமயம், இந்த பைக்கின் ஹெட்லைட் மற்றும் பின்பக்க மின் விளக்கு ஆகியவை, யமஹா நிறுவனம் 70 மற்றும் 80ம் ஆண்டுகளில் தயாரித்து வந்த பைக்குகளில் இடம் பெற்றிருந்தவைகளைப் போன்று உள்ளன.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

மேலும், ரெட்ரோ ஸ்டைலை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், அதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்கு வட்ட வடிவிலான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயம் கொண்டதாக இருக்கின்றது.

இத்துடன், வித்தியாசமான ஹேண்டில்பார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எம்டி15 பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போன்ற தோற்றத்தை சற்று லேசாக பெற்றிருக்கின்றது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

யமஹாவின் இந்த புத்தம் புதிய எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் பல அம்சங்கள் இந்திய மாடல்களில் இருப்பதைப் போன்று காட்சியளிப்பதால், இது இந்தியாவில் களமிறக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் யமஹா நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பகு குறிப்பிடத்தகுந்தது.

ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...?

அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் களமிறக்கப்படுமேயானால், ரூ. 1.41 லட்சத்தில் விற்பனையாகும் ஆர்15 மற்றும் ரூ. 1.36 லட்சத்தில் விற்பனையாகும் எம்டி15 பைக்குகளைக் காட்டிலும் மலிவு விலையில் களமிறக்கப்டலாம் என கூறப்படுகின்றது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Revealed XSR 155 In Thailand. Read In Tamil.
Story first published: Wednesday, August 21, 2019, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X