குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

யமஹா நிறுவனத்தின் எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் பைக் இந்த வருட இறுதியில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைக் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையாகி வரும் நிலையில் டிசம்பர் 19 முதல் இந்தியாவிலும் விற்பனையை தொடங்கும் என தெரிகிறது.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

மேலும் இந்த எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் விலை இந்திய மார்கெட்டில் குறைவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த பைக் தான் யமஹா நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள பாராம்பரிய ஸ்போர்ட் பைக்குகளில் மிக சிறிய அளவை உடையதாகும்.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

கிளாசிக்-ரெட்ரோ டிசைனில் மாடர்ன் பைக்குகளின் தரத்துடன் இந்த யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான ஹெட்லைட்ஸ், ரெட்ரோ தோற்றத்திற்கு ஏற்ற டெயில் லைட்ஸ் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இருவர் அமரும்படியான ஒற்றை இருக்கை மட்டும் இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. பெல்ட் ஒன்றினால் இருக்கை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

வேகம், பெட்ரோலின் அளவு குறித்து அறிய முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ளஸ்ட்டர் மூலம் ரைடர் பைக்கை எவ்வளவு தூரம் ஓட்டியுள்ளோம் என்பதையும், ஓடிஓ உடன் கியர் இன்டிகேட்டர் மற்றும் ட்ரிப் இன்டிகேட்டரையும் அறிய முடியும். மேலும் இந்த க்ளஸ்ட்டர் தெளிவான கண்ணாடியை கொண்டுள்ளதால் ரைடர்கள் மேற்கூறப்பட்டுள்ள தகவல்களை எளிதாக காண முடியும்.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் மெக்கானிக்கல் பாகங்கள் அனைத்தும் எம்டி-15 மற்றும் ஆர்15 வி3.0 பைக்குகளில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இதில் யமஹாவின் விவிஏ தொழிற்நுட்பத்துடன் உள்ள 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் 18.9 பிஎச்பி பவர் மற்றும் 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் உதவிக்கு க்ளட்ச் உடன் உள்ளது.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டீல்-டெல்டாபாக்ஸ், ரைடருக்கு பைக்கை இயக்கும்போது மிகவும் சவுகரியமான உணர்வை தருகிறது. முன்சக்கரத்தில் தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் 282 மிமீ டிஸ்க்கும் பின் சக்கரத்தில் மோனோ-ஷாக் மற்றும் 240 மிமீ டிஸ்க்கும் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் டூயுல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

இந்த அம்சங்கள் அனைத்தும் வழக்கமாக யமஹா மாடல் பைக்குகளில் கொடுக்கப்படுபவை தான். ஆனால் யமஹா ஆர்15 வி3.0 மாடலில் மட்டும் கூடுதல் அம்சமாக முன் சக்கரத்திற்கு சஸ்பென்ஷன் அமைப்பாக ஸ்பெஷல் ஃபோர்க்ஸ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் மேலும், பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை காண கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...

எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் பைக்கை அறிமுகப்படுத்த யமஹா நிறுவனம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் முடித்துள்ளது. ரெட்ரோ மாடர்ன் டிசைனில் அறிமுகமாகும் பைக்குகளில் ஒன்றாக இந்த பைக் வெளிவரவுள்ளது. இதன் அறிமுகத்துடன் யமஹாவின் மேலும் சில மாடல்கள் இதன் பிரிவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்குக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை கண்டிப்பாக இதனை வெற்றியடைய செய்யும் என்பது நிச்சயம்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha XSR 155 Could Be Launched In India On December 19
Story first published: Saturday, October 26, 2019, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X