யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

யமஹா நிறுவனம் புதிய 2020 ட்ரஸர் 700 பைக்கை ஐக்மா கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. எம்டி-07-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் ஸ்டைலான பல அப்டேட்களை கொண்டுள்ளது.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

ட்ரஸர் 700 பைக்கின் இந்த ஸ்டைலான அப்டேட்கள், யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர் மற்றும் எம்டி மோட்டார்சைக்கிள்களை ஒத்து காணப்படுகிறது. அதேபோல் ஒய்இசட்எஃப்-ஆர்1 பைக்கில் பிளவுப்பட்ட ஹலோஜன் ஹெட்லைட் அமைப்பிற்கு பதிலாக கொடுக்கப்பட்டிருந்த ட்வின் ப்ரோஜக்டர் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் தான் இந்த 2020 ட்ரஸர் 700 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

இந்த ஹெட்லைட் அமைப்புடன் இந்த பைக்கில் கழுத்தளவு மறைக்கும் வகையிலான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்க்ரீனும் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் இந்த பைக்கின் ஹேண்ட்கார்ட்டையும் புதிய வடிவில் மாற்றியுள்ளதால், எந்தவிதமான காற்று மற்றும் வானிலை சூழ்நிலையிலும் இந்த பைக்கை ஓட்டி செல்ல முடியும்.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

அகலமான ஹேண்டில்பார் மற்றும் பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த ட்ரஸர் 700 பைக் கொண்டுள்ளது. வசதியான பயணத்தை ஓட்டுனருக்கு வழங்குவதற்காக பிளவுப்படாத இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது மார்கெட்டில் உள்ள ஸ்டைலிஷ் மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற மாற்றியமைக்கப்பட்ட டெயில் லேம்ப் டிசைனையும் இந்த பைக் பெற்றுள்ளது.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

யூரோ-5விற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த ட்ரஸர் 700 பைக்கின் இணையான-ட்வின் சிபி2 என்ஜின், 689சிசியில் அதிகப்பட்சமாக, 8,750 ஆர்பிஎம்மில் 72.4 பிஎச்பி பவரையும் 6,500 ஆர்பிஎம்மில் 68 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

ஐரோப்பியன் மாசு உமிழ்வு விதியினால் யமஹா நிறுவனம் இந்த பைக்கில் ஹேர்-இன்டேக், இக்னிஷன் செட்டிங், ஃப்யூல்-இன்ஜக்‌ஷன் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் போன்றவற்றையும் பொருத்தியுள்ளது. இந்த எக்ஸாஸ்ட் அமைப்பு மாற்றியமைக்கும் விதத்திலேயே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கியரின் விகிதத்தையும் மாற்றியமைக்கலாம்.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

இதன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ மட்டுமே என்பதால் இந்த வகை மோட்டார்சைக்கிள்களில் மிகவும் எடை குறைந்த பைக்காக 2020 ட்ரஸர் 700 பைக் விளங்குகிறது. புதிய ஸ்ப்ரிங்குடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 41 மிமீ கார்ட்ரிச்-டைப் ஃபோர்க் முன்புறத்திலும் மோனோஷாக் அமைப்பு பின்புறத்திலும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

ஃபோர்க்ஸ் சக்கரம் முன்புறத்தில் 130 மிமீ அளவிலும் பின்புறத்தில் 142 மிமீ அளவிலும் உள்ளது. ப்ரேக்கிங் பணியை முன்புற சக்கரத்தில் உள்ள 282 மிமீ ட்யூல் ட்ஸ்க்கும் பின்புற சக்கரத்தில் 245 மிமீ டிஸ்க்கும் கவனிக்கின்றன. இந்த 2020 யமஹா ட்ரஸர் 700 பைக் இந்திய மார்கெட்டில் தற்போதைக்கு வெளியாவது போல் தெரியவில்லை. ஆனால் மிக விரைவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மார்கெட்டுகளில் இந்த பைக் களமிறங்க உள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Unveils 2020 Tracer Sports Tourer At EICMA
Story first published: Monday, November 11, 2019, 13:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X