செம்ம.. யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்!

யமஹா நிறுவனம் அதன் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற வகையிலான ஓர் சிறப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக யமஹா உள்ளது. இதற்கு இந்நிறுவனம் இளைஞர்களை குறிவைத்தவாறு களமிறக்கும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில், இந்தோனேசியா சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக விற்பனையில் இருக்கும் என்மேக்ஸ் ஸ்கூட்டரை 2020ம் ஆண்டிற்கு ஏற்பவாறு யமஹா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

காஸ்மெட்டிக்கைப் பொருத்தவரை எந்தவொரு மாற்றமும் பெரியளவில் செய்யவில்லை என கூறப்படுகின்றது. இருப்பினும், பழைய தலைமுறை என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் சிறு சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில், யமஹாவின் புகழ்வாய்ந் ஆர்15 பைக்கைத் தழுவி ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

அதாவது, என்மேக்ஸ் மாடல் ஸ்கூட்டரில் பயன்படுத்தும் 155 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டாரில் சற்றே ஆர்15 பைக்கில் வெளிப்படுத்துவதைப் போன்று திறன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், முந்தைய தலைமுறை என்மேக்ஸைக் காட்டிலும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள என்மேக்ஸ் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும். இத்துடன், எலக்ட்ரானிக் ரைடர் எய்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

இந்த 155 சிசி எஞ்ஜின் 15.36 பிஎஸ் பவரையும், 13.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாகும். அதாவது முந்தைய மாடலைக் காட்டிலும் 0.5 பிஎஸ் மற்றும் 0.5 என்எம் டார்க் அதிகம் என கூறப்படுகின்றது.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

மேலும், இந்த ஸ்கூட்டரில் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரில் காணப்படும் புதுவிதமான அம்சமாகும். ஆகையால், இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டர் ஸ்பெஷலான மாடலாக அவதாரம் எடுக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த திறனை ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் அதன் ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடலில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

சமீபகாலமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிதாக களமிறக்கும் வாகனங்களில் கனெக்டட் என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்து வருகின்றன. இதில் யமஹா நிறுவனமும் எந்தவொரு மாற்றமுமின்றி புதிய என்மேக்ஸ் ஸ்கூட்டரில் 'யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட்' தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஆகையால், ஸ்கூட்டரில் இடம்பெறும் ப்ளூடூத் வசதி மூலம் ஸ்மார்ட்போனை ஸ்கூட்டருடன் இணைத்து பல்வேறு வசதிகளை அதன் உரிமையாளரால் பெற முடியும்.

யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்... ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்..!

யமஹா நிறுவனம், என்மேக்ஸ்155 என்ற மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக திட்டமிட்டிருந்தது. ஆனால், பொருளாதார மந்தநிலை, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி, புதிய மாசு உமிழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த முடிவை கைவிட்டுவிட்டது. ஆகையால், வருகின்ற 2020ம் ஆண்டில் அல்லது வரும் ஏதேனும் ஓர் மாதத்தில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Updated The NMax 155 Scooter With Traction Control. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X