ரெட்ரோ ஸ்டைலில் தயாராகிய யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

யமஹா நிறுவனம், என்ட்ரீ லெவல் ரெட்ரோ ஸ்டைலிலான புதிய எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் பைக்கை உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

உலகில் உள்ள முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யமஹா, இளைஞர்களை குறி வைத்தே அதன் தயாரிப்புகள் அனைத்தையும் உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் துடிப்பான தோற்றம் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

அண்மையில்கூட, என்ட்ரீ லெவல் ஸ்போர்ட்ஸ ரக பைக்கான எம்டி15, ஆர்15, ஆர்25 உள்ளிட்ட மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

இந்நிலையில், யமஹா நிறுவனம் அதன் என்ட்ரீ லெவல் வரிசை பைக்குகளுடன், ரெட்ரோ ஸ்டைலிலான பைக்கினைச் சேர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், யமஹா எக்ஸ்எஸ்ஆர்155 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கிரேட் பைக்கர் என்ற தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

தற்போது, அறிமுகத்திற்கு தயாராகி வரும் இந்த புத்தம் புதிய ரெட்ரோ லுக்கிலான எக்ஸ்எஸ்ஆர்155 பைக், என்ட்ரீ லெவல் சிறிய ரக பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனையில் இருக்கும் எக்ஸ்எஸ்ஆர் 700 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 900 மாடல்களுக்கு கீழாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த மாடல்களில் காணப்படும் வசதிகள் சில எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கிலும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

யமஹாவின் இந்த என்ட்ரீ லெவல் எக்ஸ்எஸ்ஆர்155 பைக் முதலில் இந்தோனேசியாவில்தான் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இதன் பின்னரே இந்தியா போன்ற மற்ற உலக நாடுகளில் அறிமுகம் செய்வதுகுறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த பைக் நடப்பாண்டின் இறுதிக்குள் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

யமஹாவின் இந்த எக்ஸ்எஸ்ஆர்155 பைக், ஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர் 150ஆர் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு களமிறங்கப்பட உள்ளது. ஆகையால், அந்த பைக்கின் எஞ்ஜின் திறனுக்கு போட்டியான எஞ்ஜினையே எக்ஸ்எஸ்ஆர்155 பைக் பெற்றுள்ளது.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

அந்தவகையில், 155சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 ஆகிய மாடல் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 6 கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும். மேலும், இது 19.3 பிஎஸ் பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

மேலும், எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கில் சிறப்பான வசதியாக ஸ்டாண்டர்டு ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இத்துடன், சொகுசான சஸ்பென்ஷன் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் பிரிமியம் அப்சைட்-டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும், பைக் பள்ளம் மேடு நிறைந்த சாலைகளில் செல்லும்போது, பயணத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க உதவும்.

ரெட்ரோ ஸ்டைலில் தயாராகி வரும் யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்!

இதைத்தொடர்ந்து, பைக்கின் கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் ஃப்ரேமிற்கு பதிலாக, டெல்டா பாக்ஸ் ஃப்ரேமை யமஹா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. மேலும், எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கை அலங்கரிக்க, ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 ஆகிய பைக்குகளின் பாகங்கள் சிலவற்றையும் அது பயன்படுத்தியுள்ளது. ஆகையால், புதிதாக உருவாகி வரும் எக்ஸ்எஸ்ஆர்155 பைக் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட அதிநவீன ரெட்ரோ ஸ்டைல் பைக்காக களமிறங்க இருக்கின்றது.

Source: greatbiker

Note: Images for representation purpose only

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha XSR 155 Retro-Styled Motorcycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X