பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான யமஹா, பிஎஸ்6 தரம் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் பிஎஸ்6 வாகனங்களின் அறிமுகம் அடுத்த மாதம் நவம்பரில் இருந்து எதிர்ப்பார்க்கலாம்.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

இந்நிலையில் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பைக் அப்டேட் செய்யப்பட்டாலும் யமஹா நிறுவனம் இப்பைக்கில் 155சிசி என்ஜினையே பொருத்தியுள்ளது. இருப்பினும் என்ஜின் பிஎஸ்6 தரத்தை கொண்டுள்ளதால், தற்போதைய மாடலின் பிஎஸ்4 என்ஜின் வெளிப்படுத்தும் 19 பிஎச்பி பவரை விட 0.7 பிஎச்பி குறைவாக 18.3 பிஎச்பி ஆற்றலை இந்த ஆர்15 பைக் வெளிப்படுத்தும்.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

வெளியாகியுள்ள இத்தகவலின் என்ஜினின் டார்க் திறன் குறித்த எந்த குறிப்பும் இல்லை. இதனால் தற்போதைய மாடல் வழங்கும் டார்க் திறனை தான் இப்பைக்கும் வழங்கும் என தெரிகிறது. ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ் அமைப்பும் இந்த பிஎஸ்6 மாடலில் அப்டேட் செய்யப்படவில்லை. தற்போதைய மாடல் எரிபொருள் டூயுல்-இன்ஜெக்‌ஷன் அமைப்பை கொண்டுள்ளது. இந்த அமைப்பு தற்போதைய மாடலிலும் தொடரவுள்ளது.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி, தற்போதைய மாடலின் பரிமாண அளவுகள் அப்படியே புதிய ஆர்15 பிஎஸ்6 மாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆர்15 மாடலின் நீளம் 1990 மிமீ, அகலம் 725 மிமீ மற்றும் உயரம் 1135 மிமீ ஆகும். தரையிலிருந்து இருக்கையின் உயரம் 815 மிமீ மற்றும் பைக் ஆக்கிரமிக்கும் பரப்பின் அளவு 170 மிமீ போன்றவையும் அதே அளவுகளில் புதிய மாடலில் உள்ளன.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

தற்போதைய மாடலில் உள்ள எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் இண்டிகேட்டருடன் கூடிய பின்புற விளக்குகள், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை போன்றவற்றிலும் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பிஎஸ்6 மாடலில் கூடுதல் அம்சமாக ப்ளூடூத் இணைப்பில் அப்டேட்களை எதிர்ப்பார்க்கலாம்.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

சஸ்பென்ஷன் அமைப்பும் தற்போதைய மாடலில் உள்ள முன்புற டெலிஸ்கோப் மற்றும் பின்புற மோனோ-ஷாக் அமைப்பில் இருந்து சிறிது அப்டேட்டாக உள்ளது. அதேபோல் ப்ரேக்கிங் அமைப்பும், இப்போதைய மாடலின் டூயுல்-சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய முன்புற 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற 220 மிமீ ரோடோர் அமைப்பை விட கூடுதல் அம்சத்துடன் இருக்கும்.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

அடுத்த மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படும் ஆர்15-ன் பிஎஸ்6 மாடலின் விலை தற்போதைய மாடலை விட 10-15 சதவீதம் கூடுதலாக விற்பனையாகும் என ஏற்கனவே யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் தற்போது விற்பனையாகி வரும் ஒய்இசட்எஃப்-ஆர்15-ன் விலை சமீபத்தில் தான் 600 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. எக்ஸ்ஷோரூம்களில் இப்பைக்கின் ஸ்டாண்டர்ட் வெர்சன் ரூ.1.40 லட்சத்திற்கும் டார்க்நைட் எடிசன் ரூ.1.42 லட்சத்திற்கும் விற்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஒய்இசட்எஃப்-ஆர்15-ல் என்ஜினை தவிர்த்து மற்ற பாகங்களில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இதில் உள்ள ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தான் ஒட்டுபவருக்கு அப்டேட் செய்யப்பட்ட பைக் என்ற உணர்வை தரும். வெளியானவுடன் இப்பைக்குடன் போட்டியிட சந்தையில், கேடிஎம் ஆர்சி125, சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்155, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் 160 என்எஸ் போன்ற பைக்குகள் ரெடியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R15 BS-VI Engine Specs Leaked: India Launch Expected This Year
Story first published: Friday, October 18, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X