புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்

ஜாவா நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த புதிய பெராக் பைக்கின் ஸ்டைல் மற்றும் டிசனை ஒத்தவாறு 80'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

ஜாவா நிறுவனம் பெராக் மாடல் இருசக்கர வாகனத்தை கடந்த மாதத்தின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு ரூ. 1.95 லட்சம் என்ற விலையை அது நிர்ணயித்துள்ளது. பாபர் ஸ்டைலிலான இந்த பைக்கை அந்நிறுவனம் நடப்பாண்டின் ஆரம்பத்திலேயே இந்தியர்கள் மத்தியில் அறிமுகம் செய்துவிட்டது. இருப்பினும், ரீ-என்ட்ரியாக மீண்டும் விற்பனைக்கு காட்சிப்படுத்தும் விதமாக நவம்பர் மாதம் காட்சிப்படுத்தப்பட்டது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

ஜாவா நிறுவனம், நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது இந்தியாவில் மீண்டும் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அதன் ரசிகர்கள் மத்தியில் அது தற்போது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

எனவே, முன்னதாக சந்தையில் விற்பனையில் இருந்தபோது அளிக்கப்பட்ட அதே வரவேற்பை தற்போதும் அதன் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். ஏனென்றால், வாசம் மாறாத மலர்களைப் போலவே, அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்கூட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கிளாசிக் லுக்கைப் பெற்றிருக்கின்றன.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

இந்நிலையில், டூ-ஸ்ட்ரோக் தரம் கொண்ட ஜாவா பெராக் என கூறி இணையத்தில் ஓர் பைக்கின் புகைப்படம் வேகமாக பரவி வருகின்றது. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பைக் உண்மையான ஜாவா பெராக் அல்ல. இது ஜாவா பெராக்கின் போலி போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மிகவும் பழைமை வாய்ந்த ஓர் இருசக்கர வாகனமாகும்.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

அதாவது, 1960ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டுகள் வரை இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற மாடல்களில் ஒன்றான யெஸ்டி பைக்தான் இந்த புத்தம் புதிய தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

யெஸ்டி பைக்குகள் குறிப்பாக 1970 முதல் 80 வரை இந்திய சாலைகளில் வீர நடைப் போட்டுக் கொண்டிருந்த ஓர் மாடலாகும். இதன் கவர்ச்சியில் மயங்கிய ஒரு சிலர் தற்போது வரை இந்த பைக்கை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர்.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

அந்தவகையில், நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வந்த யெஸ்டி பைக்தான் தற்போது ஜாவா பெராக் மாடலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யெஸ்டி பைக்கையும் ஐடியல் ஜாவா நிறுவனம்தான் இந்தியாவில் தயாரித்து விற்பனைச் செய்து வந்தது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

தற்போது இணையத்தில் காட்சிக்குள்ளாகியிருக்கும் ஸெஸ்டி, ஒரு சில அம்சங்களின் குறைப்பாட்டினால் மட்டுமே அது உண்மையான ஜாவா பெராக் அல்ல என்பதை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றது. ஏனெனில், நிறம், ஸ்டைல் மற்றும் அலங்கரிப்பு உள்ளிட்டவை அச்சு அசலாக பெராக்கின் தோற்றத்திலேயே மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

ஒரு நிமிடம் பார்ப்போரின் கண்களை ஏமாற்றிவிடும் வகையில் அதன் தோற்றம் துள்ளியமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதை நம்மால் புகைப்படங்களின் வாயிலாக உணர முடிகின்றது.

தொடர்ந்து, ஒரு சில உருமாற்றத்தைத் தவிர வெறெந்த மாற்றமும் அந்த பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை.

நவீன கால ஜாவா பெராக் பைக்கில் 334சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்ட் 4-சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 30 பிஎச்பி மற்றும் 31 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த பைக்கில் 6-ஸ்பீடு டிரான்மிஷன் கொண்ட கியர்பாக்ஸ் காணப்படுகின்றது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

ஆனால், பழைய மாடல் ஜாவா 350 பைக்கில் 344சிசி திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான ஏர்-கூல்ட் டூ-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது, 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குபவை.

ஐடியல் ஜாவா நிறுவனம், இந்தியாவில் முதல்முறையாக 1962ம் ஆண்டுகளில் களமிறங்கிய போது, ஜாவாவின் தாய் நிறுவனமான சிசெச் (Czech) இடமிருந்து ஜாவா என்ற பெயருக்கான உரிமையைப் பெற்று ஜாவா 250 மாடல்களை தயாரித்து விற்பனைச் செய்து வந்தது. இது, 1969ம் ஆண்டு வரை நீடித்தது.

புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

பின்னர், இந்த பெயருக்கு உரிமை கோரல் முடிவுக்கு வந்ததையடுத்து அதே பொறியியல் யுக்தி மற்றும் பிளாட்ஃபார்மில் வைத்து உருவாக்கப்பட்டவைதான் யெஸ்டி பைக்குகள். இதன் காரணத்தினாலயே இவ்விரு பைக்குகளும் அப்போது ஒரே மாதிரியானதாக காணப்பட்டன.

Source: Rushlane

Most Read Articles
English summary
Yezdi Modified Into A Jawa Perak. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X