15.5 இல்லை... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

பிஎஸ்6 அப்டேட்டால் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 மாடலின் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை முழுமையாக இந்த செய்தியில் காண்போம்.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

பொதுவாக மோட்டார்சைக்கிள் ஒன்று பிஎஸ்4 தரத்தில் இருந்து பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டால், அதன் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவு சிறிது குறையும். ஆனால் பல்சர் என்எஸ்160 பிஎஸ்6 பைக்கில் மாறாக என்ஜின் பைக்கிற்கு வழங்கக்கூடிய ஆற்றல் 1.5 பிஎச்பி வரையில் அதிகரித்துள்ளது.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

இதுகுறித்து இணையத்தில் கசிந்துள்ள தகவலில் 2020 பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ் பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 17 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தவுள்ளது. இதுவே என்எஸ்160 பைக்கின் தற்போதைய பிஎஸ்4 என்ஜின் 8,500 ஆர்பிஎம்-ல் 15.5 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தி வருகிறது.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

இருப்பினும் அதே 160.3சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் இந்த பிஎஸ்6 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான கார்புரேட்டட் தொழிற்நுட்பத்திற்கு பதிலாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

இதன் பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 14.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது. இதே டார்க் திறனை பிஎஸ்6 என்எஸ்160 பைக்கிலும் எதிர்பார்க்கலாம். என்ஜின் அப்டேட் தவிர்த்து, பிஎஸ்6 அப்டேட்டாக என்ஸ்160 பைக்கில் பெரிய அளவில் எந்த காஸ்மெட்டிக் மாற்றத்தையும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவரவில்லை.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

இதன் முன்னோடி என்எஸ்200 பைக்கில் இருந்து பெற்ற கூர்மையான ஸ்டைலிங் பாகங்களை இந்த பிஎஸ்6 என்எஸ்160 பைக்கும் தொடர்ந்துள்ளது. இதேபோல் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகள் தற்போதைய பிஎஸ்4 பைக்கில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

ஏற்கனவே டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துவிட்ட இந்த பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை சில குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் மட்டும் பஜாஜ் நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் டெலிவிரிகள் பைக்கின் அறிமுகத்திற்கு சில நாட்கள் கழித்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

பல்சர் என்எஸ்160 பைக் எக்ஸ்ஷோரூமில் ரூ.94,106 என்ற ஆரம்ப விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இதன் விலையில் எந்த அளவிற்கு மாற்றம் இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. எப்படியிருந்தாலும் போட்டி நிறுவனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான விலையை தான் பஜாஜ் நிறுவனம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கலாம்.

15.5 இல்லை.... 17 பிஎச்பி-ல் இயங்கவுள்ள பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ்160...

கூடுதலாக 1.5 பிஎச்பி வெளியிடும் ஆற்றலை பெற்றதன் காரணமாக பல்சர் என்எஸ்160, மிகவும் ஆற்றல் மிக்க மோட்டார்சைக்கிளாக அதன் பிரிவில் விளங்குகிறது. இந்திய சந்தையில் இதன் பிரிவில் சுசுகி ஜிக்ஸெர் 155, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, யமஹா எஃப்இசட்-எஸ் மற்றும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar NS160 BS6 Specification Leaked Ahead Of Launch: Becomes Powerful
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X