புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்-ப்ளேட் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.05 லட்சத்தை விலையாக பெற்றுள்ள பிஎஸ்6 எக்ஸ்-ப்ளேட் பைக், சிங்கிள்-டிஸ்க் மற்றும் டபுள்-டிஸ்க் என இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்ட்களும் அதிகளவில் புதிய தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

இந்த பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் மட்டுமே டீலர்ஷிப்களில் நடைபெற்று வரும் நிலையில் டெலிவிரி பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. புதிய எக்ஸ்-ப்ளேட் பைக்கில் வழக்கமான 160சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் ஹோண்டா நிறுவனம் பொருத்தியுள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

அதே 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 13.67 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பில் பிஎஸ்6 அப்டேட்டினால் ஃப்யூல்-இன்ஜெக்டட் தொழிற்நுட்பத்தை தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ள குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

இந்த சிஸ்டம் பைக்கின் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனிற்காக உகந்த ஏர்-ஃப்யூல் கலவையை உறுதிப்படுத்தும் 8-ஆன்போர்டு சென்சார்களுடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்-ப்ளேட் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும் மோனோ-ஷாக் செட்அப் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 276மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் வேரியண்ட்டை பொறுத்து 220மிமீ டிஸ்க் அல்லது 130மிமீ ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ம் நிலையாக உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் மொத்த எடை 146 கிலோவாக உள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

அதுவே டாப் வேரியண்ட் ஒரு கிலோ கூடுதலாக 147 கிலோவை எடையாக கொண்டுள்ளது. டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் புத்துணர்ச்சியான டிசைனில் காட்சியளிக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

டிசைன் மாற்றத்தில் புதிய ரோபோகாப் வடிவத்தில் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், எல்இடி டெயில்லேம்ப்கள், செதுக்கப்பட்ட வடிவத்தில் எரிபொருள் டேங்க் மற்றும் இரட்டை-அவுட்லெட் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன. அதேபோல் புதுமையான க்ராஃபிக்ஸை பெற்றுள்ள இந்த பிஎஸ்6 பைக்கில் புதியதாக அலாய் சக்கரங்கள் மற்றும் பிளவுப்பட்ட க்ராப் ரெயில்களும் உள்ளன.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

ஹோண்டா நிறுவனம் எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக்கிற்கு பேர்ல் ஸ்பார்டன் ரெட், பேர்ல் இக்னியஸ் ப்ளாக், மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வல் ப்ளூ மெட்டாலிக் என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...

இந்த 160சிசி பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் சந்தையில் தற்சமயம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, சுசுகி ஜிக்ஸெர் 155 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 உள்ளிட்ட பைக் மாடல்கள் உள்ளன. ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பைக்கிற்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்த நிலையை டிசைன் மாற்றங்களுடன் வெளிவந்துள்ள இந்த பிஎஸ்6 பைக் மாற்றுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
New Honda X-Blade BS6 Bike Launched In India: Prices Start At Rs 1.05 Lakh
Story first published: Wednesday, July 8, 2020, 1:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X