கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

மற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுக்கு போட்டியாக கவாஸாகி நிறுவனம் நிஞ்சா 300 மாடலை பிஎஸ்6 தரத்திற்கு இணையாக அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பிஎஸ்6 பைக் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

புனேவில் ஏஆர்ஏஐ சோதனை அமைப்பிற்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இது பிஎஸ்6 பைக் என்பதை அடையாளப்படுத்தப்படுவதற்கு பைக்கின் நம்பர் ப்ளேட்டின் சிவப்பு நிறம் தான் உதவியது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

கவாஸாகி நிஞ்சா 300, இப்போதும் விற்பனை செய்யப்பட்டுவரும் சில நாடுகளில் இந்தியாவும் (சில டீலர்ஷிப்களில் மட்டும்) ஒன்றாக உள்ளது. ஏனெனில் பெரும்பாலான நாடுகளில் நிஞ்சா 300 மாடலுக்கு பதிலாக அதிக எரிப்பொருள் திறன் வாய்ந்த நிஞ்சா 400 பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

இந்தியாவில் இந்த இரு பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் நிஞ்சா 400 மாடலின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், நிஞ்சா 300 மாடலை அதிகமானோர் விரும்புவதும் இந்த பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்த கவாஸாகி நிறுவனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்4 மாடல் இந்திய சந்தையில் ரூ.3 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுக புதியதில் இந்த பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இந்த விலை சுமார் ரூ.60,000 அதிகமாகும். இந்த விலை அதிகரிப்பிற்கு, குறிப்பிட்ட இடைவெளியில் நிஞ்சா 300 பைக்கில் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் தான் முக்கிய காரணம்.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

நிஞ்சா 300 பிஎஸ்6 பைக்கிற்கு நியாயமான ஒரு விலையை இந்திய சந்தையில் கவாஸாகி இந்தியா நிறுவனம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் பிஎஸ்6 பைக் முந்தைய மாடலை விட ரூ.10,000- ரூ.15,000 வரை விலை அதிகரிப்பை பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296சிசி, லிக்யூடு கூல்டு, இரட்டை-சிலிண்டர் (இணையான) என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக பைக்கிற்கு 38 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வழங்குகிறது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

இந்த பைக்கிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட நிஞ்சா 400 பைக்கிற்கு, 47.5 பிஎச்பி பவர் மற்றும் 38 என்எம் டார்க் திறனை 399சிசி இணையான-இரட்டை என்ஜின் வெளிப்படுத்துகிறது. இரு பைக்குகளிலும் உள்ள என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

பொதுவாக பைக் ஒன்று பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படுமேயானால், அதன் என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவு குறையும். ஆனால் அதிக எரிபொருள் திறன் கொண்ட பைக்குகள் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றப்படும் பொழுது அதன் என்ஜின் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

நிஞ்சா 300 பிஎஸ்6 என்ஜினின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் மாற்றங்களை கவாஸாகி நிறுவனம் மேற்கொண்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த புதிய பிஎஸ்6 பைக் பழைய தொழிற்சாலைக்கு மாற்றாக புதியதொரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

இந்திய சந்தையில் கவாஸாகி நிஞ்சா 300 மாடல் பைக்கிற்கு போட்டியாகவுள்ள யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கில் நிஞ்சா 300 பைக்கிற்கு இணையாக இரட்டை-சிலிண்டர் அமைப்பை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

மற்றொரு போட்டி மாடலான கேடிஎம் 390 ட்யூக் அல்லது ஆர்சி390, நிஞ்சா 300 பைக் அளவிற்கு இல்லாமல் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் பெற்றுள்ளது. இந்த கேடிஎம் மாடல்களின் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

கவாஸாகி நிஞ்சா 300 பிஎஸ்6 பொது சாலையில் சோதனை ஓட்டம்...

எண்ட்ரி-லெவல் பைக்காக ஜப்பான் ஆட்டோ மொபைல் நிறுவனமான கவாஸாகி நிறுவனத்தில் அறிமுகப்படுத்த நிஞ்சா 300 மாடல் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் 300சிசி பைக்குகளில் ஒன்றாக உள்ளது. இதுவே இதன் பிஎஸ்6 மாடலின் இந்த சோதனை ஓட்டத்திற்கு காரணம்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Spy pictures of Kawasaki Ninja 300 BS6
Story first published: Wednesday, January 22, 2020, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X