கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

புதிய கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பிஎஸ்6 பைக்கின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

இந்தியாவின் நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக் சிறந்த க்ரூஸர் வகை மாடலாக இருந்து வருகிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை இந்த பைக்கிற்கு அதிக மதிப்பை கொடுத்து வருகிறது.

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் கூடிய கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2019 மாடலைவிட தற்போது 2020 மாடலின் விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

கடந்த ஆண்டு இறுதியில் மேம்படுத்தப்பட்டு வந்த இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கிற்கு ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பிஎஸ்6 மாடலானது ரூ.6.99 லட்சம் என்ற சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

இதனால், இதன் நேரடி போட்டியாளராக இருந்து வரும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கைவிட குறைவான விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

MOST READ: கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் விடுதலையானது... தடைகாலத்திலும் டெலிவரியால் மகிழ்விக்கும் கியா!

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

2020 மாடலாக விற்பனையில் இருக்கும் கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கில் பாரம்பரியமான வட்ட வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கும் எல்இடி ஹெட்லைட்டுகள், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், ஸ்போக்ஸ் வீல்கள், அகலமான ஹேண்டில்பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

இந்த பைக்கில் இருக்கும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்ட 773சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 69.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் உள்ளது.

MOST READ: பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

மேலும், டபுள் கிராடில் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 41 மிமீ முன்புற ஃபோர்க்குகள் கொண்ட டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன.

கவாஸாகி டபிள்யூ800 ஸ்ட்ரீட் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. எம்ஆர்எஃப் டயர்கள் உள்ளன. பாரம்பரிய க்ரூஸர் வகை பைக் மாடலை தேர்வு செய்ய காத்திருப்போருக்கு இது சிறந்த மதிப்பை அளிக்கும் என்று கூறலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has reduced the price of its 2020 W800 Street cruiser bike in India by Rs.1 Lakh.
Story first published: Monday, May 18, 2020, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X