புதிய அசத்தலான டிசைனில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் பிஎஸ்6 ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் அறிமுகம்.!

கேடிஎம் நிறுவனம் புதிய 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்களை பிஎஸ்6 தரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2020 பிஎஸ்6 பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட்களை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

2020 ட்யூக் & ஆர்சி125 பிஎஸ்6

மற்ற அனைத்து கேடிஎம் பைக்குகளை காட்டிலும் ட்யூக்125 மாடலில்தான் பிஎஸ்6 அப்டேடிற்காக மிக குறைவான அளவில் டிசைன் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கிட்டத்தட்ட தற்போதைய பிஎஸ்4 வெர்சனின் தோற்றத்தில் காட்சியளிக்கின்ற இந்த பைக்கில் அதே 124.7சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் தொடர்ந்துள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14.5 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவல்லது. கேடிஎம் ட்யூக்200 மாடலில் வழங்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்பு தான் இந்த பைக்கிற்கும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

பிஎஸ்6 அப்ப்டேட்டால் இந்த பைக் முந்தைய வெர்சன் மாடலில் இருந்து ரூ.5,500 வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. இதனால் 2020 ட்யூக்125 பிஎஸ்6 இந்திய சந்தையில் ரூ.1.38 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் ஆர்சி வெர்சன் ரூ.1.55 லட்சத்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சனின் விலையை விட ரூ.6,500 அதிகமாகும்.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

2020 ட்யூக் & ஆர்சி200 பிஎஸ்6

பிஎஸ்4 தரத்தில் கேடிஎம் ட்யூக் 250 மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 1290 சூப்பர் ட்யூக் ஆர் மாடல்கள் பெற்றுள்ள டிசைனில் பெரும்பகுதியை ட்யூக்200 பைக்கின் இந்த புதிய பிஎஸ்6 மாடல் கொண்டுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

எல்இடி டிஆர்எல்களை கொண்ட வளைவான ஹெட்லைட் அமைப்பை பெற்றுள்ள இந்த புதிய ட்யூக்200 பைக்கில், முந்தைய தலைமுறை பைக் கொண்டிருந்ததை விட பெட்ரோலை 3.3 லிட்டர் அதிகமாக ஏற்கக்கூடிய முரட்டுத்தனமான டிசைனில் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

அசத்தலான க்ராஃபிக்ஸ் டிசைன்களுடன் இரு விதமான நிறத்தேர்வுகளில் இந்த புதிய பிஎஸ்6 பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. எலக்ட்ரானிக் ஆரஞ்ச்- கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு என்பவை இந்த பிஎஸ்6 பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள நிறத்தேர்வுகளாகும்.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

டிசைன் மாற்றத்தை தவிர்த்து பார்த்தால், ட்யூக்200 பைக்கின் 199.5சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, லிக்யூடு-கூல்டு என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பிஎஸ்4 வெர்சனில் பைக்கிற்கு வழங்கிய அதே 24.6 பிஎச்பி பவர் மற்றும் 19.3 என்எம் டார்க் திறனை தான் இந்த பிஎஸ்6 மாடலுக்கும் வழங்கவுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

இவை மட்டுமின்றி சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகளையும் இந்த பிஎஸ்6 பைக் முந்தைய மாடலில் இருந்து அப்படியே பெற்றுள்ளது. ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ட்யூக்200 மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

ஆர்சி200 பிஎஸ்6 மாடல் ட்யூக்200 பிஎஸ்6 பைக்கின் பெரும்பான்மையான பாகங்களில் ஒத்து காணப்படுகிறது. சேசிஸ் மட்டும் ட்யூக் மாடலில் பிளவுப்பட்ட ஸ்டீல் ட்ரெல்லிஸ் ப்ரேம் ஆகவும், ஆர்சி200 மாடலில் பிளவுப்படாத ஸ்டீல் ட்ரெல்லிஸ் ப்ரேம் ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

கேடிஎம் 200-ன் ட்யூக் மாடலில் கொண்டு வந்துள்ளதுபோல் ஆர்சி வெர்சன் என்ஜினின் கொள்ளளவில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இதனால் ஆர்சி200 பிஎஸ்6 பைக்கில் வழக்கமான 9.5 லிட்டர் எரிபொருள் டேங்க் தான் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

இருப்பினும் பக்கவாட்டுகளில் இந்த பைக் அதிகப்படியான பேனல்களை கொண்டுள்ளதால் ஆர்சி200 பிஎஸ்6 மாடலின் எடை ட்யூக்200 பிஎஸ்6-ஐ விட 4 கிலோ அதிகமாகவுள்ளது. ரூ.6 ஆயிரத்தை பிஎஸ்6 அப்டேட்டால் விலை அதிகரிப்பாக பெற்றிருக்கும் ஆர்சி200 பிஎஸ்6 பைக் மார்க்கெட்டில் இனி ரூ.1,96,768-ல் விற்பனை செய்யப்படும்.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

இவை மட்டுமின்றி கேடிஎம் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி390 மாடலையும் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள மற்ற 4 பைக்குகளை விட இந்த பைக் வித்தியாசப்படுவதற்காக இந்த ஆர்சி பைக்கில் அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச்-ஐ கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

373.3சிசி சிங்கிள் சிலிண்டர், 4-வால்வு, லிக்யூடு கூல்டு என்ஜின் 9,000 ஆர்பிஎம்-ல் 43.5 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 36 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. ஆர்சி200 பிஎஸ்6 மாடலை போல் இந்த ஆர்சி வெர்சன் பைக்கும் 9.5 லிட்டர் பெட்ரோல் டேங்கை தான் பெற்றுள்ளது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

கேடிஎம் ஆர்சி390 பிஎஸ்6 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆர்சி பைக்கின் பிஎஸ்4 வெர்சனின் விலையை விட வெறும் 4 ஆயிரம் ரூபாய் தான் அதிகம். ட்யூக்390 பிஎஸ்6 பைக் கடந்த வாரத்தில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

கேடிஎம் நிறுவனத்தின், தொழிற்சாலை ரேஸர்களின் கருத்திற்கு இணங்க தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஆர்சி வெர்சன் பைக்குகளும் புதிய நிறத்தையும், க்ராஃபிக்ஸ் டிசைன்களையும் பெற்றுள்ளன.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

கேடிஎம்-ன் இந்த புதிய அறிமுக பைக்குகளில் 200 ட்யூக்& ஆர்சி பிஎஸ்6 மற்றும் ஆர்சி390 பிஎஸ்6 பைக்குகள் ஏற்கனவே விற்பனையை இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் 125 பிஎஸ்6 மாடலின் ட்யூக்& ஆர்சி வெர்சன்கள் இன்னும் சில தினங்களில் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளன.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இவற்றின் விலைகள் இதற்கு முந்தைய பிஎஸ்4 வெர்சன்களை விட ரூ.4,000- ரூ.11,000 வரை அதிகமாகவுள்ளது. இது சிறிய அளவிலான விலை அதிகரிப்பு தான். என்றாலும் இது, கேடிஎம்-ல் எதாவது ஒரு பைக்கை வாங்கிவிட மாட்டோமா என எண்ணும் நடுத்தர இளைஞர்களுக்கு சிறிது வருத்தத்தை தரக்கூடிய செய்தியே.

புதிய அட்டகாசமான டிசைன்களில் 2020 கேடிஎம் 125, 200 மாடல்களின் ட்யூக் & ஆர்சி வெர்சன்கள் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...!

விலை ஏற்றத்திற்கு இணையாக தோற்றமும் என்ஜினின் தரமும் வழங்கப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் நினைத்தால் இவற்றின் விற்பனையை யாராலும் தடுக்க முடியாது என்பது நிதர்சனம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
KTM LAUNCHES ALL NEW BS6 COMPLIANT 2020 RANGE 125,200 DUKE & RC GETS A COMPLETE UPGRADE
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X