புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

விரைவில் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 250 ட்யூக் பைக் புதிய நிறத்தில் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

பஜாஜ் நிறுவனம் முதன்முதலாக 2012ல் ஆஸ்திரியன் ப்ராண்ட்டான கேடிஎம்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத்தில் இருந்து முதல் பைக் மாடலாக இந்திய சந்தையில் 200 ட்யூக் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

அதன்பின் சில மாதங்கள் கழித்து 390 ட்யூக் அறிமுகமானது. ஆனால் இவ்விரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையே பெரிய அளவில் விலை வித்தியாசமும், செயல்படு திறனும் இருந்தன. இதனை பூர்த்தி செய்யும் விதத்தில் கேடிஎம் நிறுவனம் 250 ட்யூக் மாடலை கடந்த 2017ல் அறிமுகப்படுத்தியது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

அறிமுகமான புதியதில் அவ்வளவாக வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறாத இந்த பைக் பிறகு அதிகளவில் பைக் பிரியர்களை ஈர்த்தது. டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ள ட்யூக் 250 மாடல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

வருகிற ஏப்ரல் மாதம் முதம் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அமலாகவுள்ள நிலையில் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து இரண்டாவது பிஎஸ்6 மாடல் பைக்காக இந்த புதிய ட்யூக் 250 விரைவில் அறிமுகமாகவுள்ளது. முதல் பிஎஸ்6 பைக்காக கேடிஎம் 390 அட்வென்ஜெர் சமீபத்தில் அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

ட்யூக் 250 பைக்கின் பிஎஸ்6 மாடல் எந்த விலையில் விற்பனையாகவுள்ளது என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் இந்த 2020 ட்யூக் 250 பிஎஸ்6 பைக் புதிய நிறத்தில் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ளது. இதனால் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

இந்த சில்வர்-கருப்பு நிற மட்டுமில்லாமல் கருப்பு-ஆரஞ்ச், சில்வர்-ஆரஞ்ச் என்ற இரு நிறத்தேர்வுகளிலும் இந்த புதிய பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆனால் இந்த மூன்று நிறத்தேர்விலும் ட்ரெல்லிஸ் ப்ரேம் ஆரஞ்ச் நிறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

மற்றப்படி தொழிற்நுட்ப வசதிகளை பார்த்தால், இந்த புதிய பைக்கில் பெரிதாக எந்த டெக்னாலஜி அப்டேட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை. ஆனால் இந்த குறையை புதிய பெயிண்ட் அமைப்பு மறைத்துவிடும் என்று தான் தெரிகிறது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

பொதுவாக, என்ஜினின் வெளியிடும் ஆற்றல், பைக் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டால் குறையும். ஆனால் கேடிஎம் நிறுவனம் அவ்வாறான சவாலை மேற்கொள்ளாது. இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 390 அட்வென்ஜெர் பிஎஸ்6 பைக், 390 ட்யூக் பிஎஸ்4 தரத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை தான் அப்படியே கொண்டுள்ளது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

இதனால் இந்த 250 ட்யூக் பிஎஸ்6 மாடலும் என்ஜினின் திறனில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் கொண்டிருக்காது என எதிர்பார்க்கலாம். தற்போதைய கேடிஎம் 250 ட்யூக்கின் பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் 2020 கேடிஎம் ட்யூக் 250 பிஎஸ்6... இந்திய அறிமுகம் எப்போது?

250 ட்யூக் பிஎஸ்4 பைக் இந்திய சந்தையில் தற்சமயம் ரு.1.95 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இதன் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றப்படி கேடிஎம் 250 மாடலின் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட ஆர்சி வெர்சனை பற்றிய எந்த தகவலும் இல்லை.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2020 KTM Duke 250 BS6 in new colours – Arrives at dealer
Story first published: Wednesday, January 22, 2020, 17:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X